Covid in villages mnregs demand sees sharp fall in may from year before Tamil News : கோவிட் -19-ன் இரண்டாவது அலையில் கிராமங்கள் அதிகம் தாக்கப்பட்டதால், கடந்த ஆண்டு முதல் அலையின்போது அதிகமாக உயர்ந்திருந்த MNREGS-ன் கீழ் திறமையற்ற பணிக்கான கோரிக்கையும் கடுமையாகக் குறைந்திருக்கிறது.
மே மாதத்தில், சுமார் 2.18 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தைப் பெற்றன. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் கொண்டிருந்த 3.30 கோடி குடும்பங்களை விட 34% குறைவு. மே 2021-க்கான எண்ணிக்கை, மே 2019-க்கு முந்தியதைப் போலவே இருந்தது.
MNREGS கோரிக்கை ஏப்ரல் 2021-ஐ விட சற்றே அதிகமாக இருந்தது. இந்தத் திட்டத்தை 2.12 கோடி குடும்பங்கள் பயன்படுத்தின.
ஜூன் 15 வரை MNREGS போர்ட்டலில் கிடைத்த தரவுகளின் பகுப்பாய்வு, மத்தியப் பிரதேசம், மிசோரம், ஒடிசா, அசாம், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மே மாத சரிவு ஒரே மாதிரியாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, தாமன் மற்றும் டயு ஆகியவற்றுக்குத் தரவு கிடைக்கவில்லை.
லட்சத்தீவு, லடாக், புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், அந்தமான் மற்றும் நிக்கோபார், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, சிக்கிம், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், மகாராஷ்டிரா, இமாச்சலப்பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மே 2019-ல் MNREGS தேவை குறைவாக இருந்தது.
கூர்மையான சரிவைக் கண்ட முக்கிய மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் ஒன்று. இந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 8.08 லட்சம் குடும்பங்கள் MNREGS பெறுகின்றன. 2020 மே மாதத்தில் 47.29 லட்சத்துடன் ஒப்பிடும்போது, 83% சரிவு. மே 2019 உடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை 11.33 லட்சம் வீடுகளோடு 29% வீழ்ச்சியை சந்தித்தது.
“கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் போது, மாநிலம் முழுவதும் MNREGS தளங்களில் தினமும் 1-1.5 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 7.5 லட்சம் பேர் வரை சென்றது” எனக் குறிப்பிட்டு இதற்கு கோவிட் -19 ஒரு காரணம் என்றும் ஓர் உத்தரபிரதேச அரசாங்க அதிகாரி கூறினார்.
கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி, MNREGS-கான அதிகபட்ச ஒற்றை நாள் வருகையை அரசு பதிவு செய்தபோது, அந்த எண்ணிக்கை 62 லட்சமாக இருந்தது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கேரளாவிலும் ஒரு பெரிய MNREGS சரிவு காணப்படுகிறது. 2020 மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மாதத்தில் 83% வீடுகளில் சரிவு காணப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம், MNREGS பெறும் அதிகபட்ச வீடுகளில் உத்தரப்பிரதேசம் முதலிடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா அடுத்தடுத்து இடங்களில் இருந்தன. மே 2021-ல் ஆந்திரா இன்னும் உயர்ந்த இடத்தில் இருக்கும் நிலையில், மத்தியப் பிரதேசமும் தெலுங்கானாவும் இப்போது முதல் மூன்று இடங்களில் உள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil