4,000 சிறை கைதிகள், மீண்டும் டெல்லி சிறைக்கு இன்று திரும்புகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
மார்ச் 25, தேதி, நீதிபதி எம் ஆர் ஷா தலைமையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. கொரோனா காலத்தில் ஜாமின் வழங்கப்பட்டு வெளியே இருக்கும் கைதிகள், 15 நாட்களில் மீண்டும் சிறைக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
” டெல்லியில் கொரோனா தீவிரமாக இருக்கும்போது, கைதிகளுக்கு அவசர ஜாமின் வழங்கப்பட்டது. இதில் அதிகமானோர் விசாரணைக்குட்பட்ட கைதிகளாக இருகின்றனர். சிலருக்கு அவர்கள் செய்த குற்றத்திற்காக எப்போதும் ஜாமின் கிடைக்காது. அப்படிபட்டவர்களுக்குக்கூட கொரோனா காலத்தில் ஜாமின் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், இவர்களை அனைவரும் சிறைக்கும் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி அரசின் தகவல்படி 3,630 விசாரணைக் கைதிகள், 751 குற்றவாளிகளுக்கு கொரோனா ஊரடங்கின் போது, அவசர ஜாமினில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக, நீதித்துறை வல்லுநர்கள் கூறுகையில், டெல்லி அரசு செய்வது சரியாக இல்லை என்றும், கைதிகள் ஜாமினில் இவ்வளவு ஆண்டுகள் கொடுத்து வெளியே அனுப்பிவிட்டு. உடனே மீண்டும் சிறைக்கு அழைப்பது சரியாக இருக்காது. இந்நிலையில் சிறைக்கும் சென்ற பிறகு, கைதிகள் மீண்டும் ஜாமினுக்கு விண்ணபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 24 வயதாகும் விசாரணைக் கைதி ஒருவர் மண்டோலி சிறையில் இருந்து ஆகஸ்ட் 2020-ம் ஆண்டு அவர ஜாமினில் வெளியே வந்துள்ளார் . இவர் கூறுகையில் “ கடந்த 2 ஆண்டுகள் ஜாமினில் வெளியே இருக்கிறேன். இந்த இரண்டு ஆண்டுகளாக அப்பா நடத்தி வந்த சிறு தொழிலுக்கு உதவினேன். அவரின் சார்பாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்து அவருக்கு உதவினேன். இப்போது மீண்டும் நான் சிறைக்கும் செல்ல வேண்டும் என்பதால், டிஜிட்டல் பண பரிவர்தனை கணக்கை நீக்கிவிட்டேன்” என்று கூறினார்.
43 வயதான, விசாரணைக் குற்றவாளி கூறுகையில் “ முதல் கொரோனா அலை முடிந்தபிறகு, சரணடைய வேண்டும் என்று கூறினார்கள். நான் மீண்டும் சிறைக்கு சென்றேன். தொடர்ந்து கொரோனாவின் இரண்டாவது அலையில் அவசர ஜாமினில் வெளியே வந்தேன். கடந்த 2 வருடங்களாக குடும்பத்துடன் இருக்கிறேன். நல்ல வேலை செய்கிறேன். இந்நிலையில் 15 நாட்களுக்குள் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் “ என்று கூறினார்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு, மார்ச் 26, 2020-ம் ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சிறை கைதிகளை ஜாமினில் விடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜூலை 16, 2021ம் ஆண்டு, ஜாமினில் வெளியே சென்ற கைதிகள், அடுத்த உத்தரவு வரும், வரை மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இந்நிலையில் கடந்த மார்ச் 24-ம் தேதி, அவசர ஜாமினில் வெளியான கைதிகள், 2 வாரங்களுக்குள் சரணைடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil