மகாராஷ்டிரா கோவிட் பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் ஷஷாங்க் ஜோஷி, “இப்போது நாம் மூன்றாவது அலையில் இருக்கிறோம். நாம் பொறுப்பான நடத்தையுடன் இதிலிருந்து வெளியே வர வேண்டும். தொற்றுகள் லேசானதாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் அறிகுறியற்றவர்களாக இருப்பதுதான் இன்று நம்முடைய மிகப்பெரிய சவால்” என்று கூறுகிறார்.
மகாராஷ்டிரா கோவிட் பணிக்குழுவின் உறுப்பினரான டாக்டர் ஷஷாங்க் ஜோஷி, 2020-2021ம் ஆண்டிற்கான ‘ஐ.எம்.ஏ சிறப்பு விருது’ பெற்றுள்ளார். புது டெல்லியைச் சேர்ந்த இந்திய மருத்துவ சங்கத்தால் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மிக உயர்ந்த அளவில் சிறப்பான சாதனைக்காக புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. டிசம்பர் 27-28 தேதிகளில் பாட்னாவில் நடைபெற்ற 96வது அகில இந்திய மருத்துவ மாநாட்டின் போது டாக்டர் ஜோஷி இந்த விருதைப் பெற்றார்.
டாக்டர் ஜோஷி கூறியதாவது: “இப்போது நாம் மூன்றாவது அலையில் இருக்கிறோம். நாம் பொறுப்பான நடத்தையுடன் இதிலிருந்து வெளியே வர வேண்டும். தொற்றுகள் லேசானதாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் அறிகுறி இல்லாதவர்களாக இருப்பதே இன்றைய நமது மிகப்பெரிய சவால். நீங்கள் மும்பையைப் பார்த்தால், 6,347 பேரில் அறிகுறி இல்லாமல் 5,712 தொற்றுகள் உள்ளன. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 389 மட்டுமே உள்ளன. எனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் அளவு 9% மட்டுமே உள்ளது. ஒரே ஒரு மரணம் மட்டுமே நடந்துள்ளது.
எனவே, அடிப்படையில் கோவிட் ஒரு சமாளிக்கக்கூடிய நோயாக மாற வேண்டும். மேலும், நாம் இதிலிருந்து நல்ல முறையில் வெளியேற வேண்டும். மூன்றாவது அலையில் நாம் மூழ்கிவிடக்கூடாது. அதுவே, நம்முடைய மிகப்பெரிய இலக்காகும். அதற்காக மருத்துமனை பராமரிப்பு சிகிச்சையைவிட வீட்டு பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
பாதிக்கப்படக்கூடிய மற்றும் மருத்துவமனைக்குச் செல்லும் குழுக்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தொற்று பரவும் நேரத்தில், அவற்றை டெல்டா மாறுபாட்டிலிருந்து வேறுபடுத்த வேண்டும். ஏனெனில் டெல்டா இன்னும் உள்ளது.
எனவே, அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். இந்த ஆண்டு, நாங்கள் பூஜ்ஜிய கோவிட் இறப்புகளைக் கொண்டிருக்க விரும்புகிறோம். மருத்துவமனை அல்லது ஐசியூவில் அனுமதிக்கப்படும் மக்கள் பூஜ்ஜியமாக இருக்க விரும்புகிறோம். கோவிட் மற்ற பொதுவான ஜலதோஷம் மாதிரி நோயாக மாற வேண்டும்.. இதுதான் எங்கள் விருப்பம்.” என்று டாக்டர் ஜோஷி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"