Advertisment

சுற்றுலா தளங்களில் அதிகரிக்கும் கூட்டம்; கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அரசு எச்சரிக்கை

Covid task force head points to crowds at hill stations, warns of a new virus spread: நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுவதற்கு முன்னர், குறைந்தது மூன்று வாரங்களுக்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10,000 க்கு குறைவான நிலையை இந்தியா அடைய வேண்டும் என்று டாக்டர் பால் கூறினார்.

author-image
WebDesk
New Update
சுற்றுலா தளங்களில் அதிகரிக்கும் கூட்டம்; கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அரசு எச்சரிக்கை

தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இன்னும் 40,000 க்கு மேல் இருந்து வரும் நிலையில், சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என தகவல்களும் புகைப்படங்களும் வெளிவருகின்றன. இது குறித்து இந்தியாவின் கொரோனா பணிக்குழுவின் தலைவர், கொரோனாவின் இரண்டாவது அலை இன்னும் முடிவடையவில்லை என்றும், மக்கள் தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

Advertisment

வெள்ளிக்கிழமை அன்று, கடந்த இரண்டு வாரங்களாக குறைந்து வந்த தினசரி புதிய பாதிப்புகள் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்த டாக்டர் வி.கே. பால், மெதுவான வீழ்ச்சியின் வீதம் தற்போதைய நிலைமை தொடராவிட்டால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதற்கான ஒரு குறிகாட்டியாகும் என்று கூறினார்.

நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுவதற்கு முன்னர், குறைந்தது மூன்று வாரங்களுக்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10,000 க்கு குறைவான நிலையை இந்தியா அடைய வேண்டும் என்று டாக்டர் பால் கூறினார்.

"வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவது என்பது சரிதான். இது முன்னர் அதிகமான வேகத்தில் குறைந்து கொண்டிருந்தது. ஆனால் அதற்காக நாம் இந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தினசரி பாதிப்புகள் ஒரு நாளைக்கு சுமார் 35,000-37,000 என்றால், இது முதல் அலை உச்சத்தில் நாம் கண்ட பாதிப்புகளின் மூன்றில் ஒரு பங்கு ஆகும். போர் இன்னும் முடிவடையவில்லை; இரண்டாவது அலை முடிந்துவிடவில்லை. சில மாவட்டங்கள் மற்றும் இரண்டு குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாக உள்ளது. எனவே அங்கு பாதிப்புகள் உயர்ந்து கொண்டிருக்கும் வரை, தேசம் பாதுகாப்பாக இல்லை, ”என்று டாக்டர் பால் கூறினார்.

80 சதவீத புதிய பாதிப்புகள் இப்போது நாட்டின் 90 மாவட்டங்களில் இருந்து வருவதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஆறு மாநிலங்களில் இந்த மாவட்டங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்டவை உள்ளன - மகாராஷ்டிரா (15), கேரளா (14), தமிழ்நாடு (12), ஒடிசா (12), ஆந்திரா (10), மற்றும் கர்நாடகா (10).

"நிறைய முயற்சி மற்றும் சிரமத்துடன், பாதிப்புகள் குறைந்து வரும் சூழ்நிலையை நாங்கள் அடைந்துவிட்டோம். ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே நிலைமை மோசமாக உள்ளது. ஆனால் வைரஸை நாம் முழுமையாகக் ஒழித்துவிடவில்லை என்பதால் கவனமாக இருக்க வேண்டும். நாம் வைரஸுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தால், மற்றும் பரிமாற்றச் சங்கிலிகள் தொடங்கப்பட்டால்… அது நம்மால் தாங்க முடியாத ஒன்றாக ஆகிவிடும் ”என்று டாக்டர் பால் கூறினார்.

publive-image

முதல் அலைக்குப் பிறகு, உள்ளூர் பகுதிகளில் (லோக்கலில்) பாதிப்பு அதிகரித்து வருவதால், அவை தொற்றுநோய் பரவலை வெடிக்கச்(அதிகரிக்கச்) செய்யலாம் என்றும் டாக்டர் பால் எச்சரித்தார்.

"கடந்த காலங்களில் சில பகுதிகளில் பாதிப்புகள் பரவலாக பரவியதை நாங்கள் கண்டோம், பின்னர் பாதிப்புகள் அதிகரித்தது. இந்த அலையை வீழ்ச்சியடையச் செய்வதற்கான செயல்முறையை அடிப்படை எண்ணிக்கைக்கு மிகக் குறைந்த மட்டத்திற்கு கொண்டுவர திறம்பட உதவ வேண்டும் என்ற எச்சரிக்கை இது. அடிப்படை இன்னும் அடையப்படவில்லை. அடிப்படை 10,000 க்கு கீழே இருக்கும். இது குறைந்தது மூன்று வாரங்களுக்கு இருக்க வேண்டும், ”என்று டாக்டர் பால் கூறினார்.

ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை தினசரி புதிய பாதிப்புகள் சராசரியாக 46,258 ஆக இருப்பதாகவும், ஜூலை 3 முதல் ஜூலை 9 வரை இந்த எண்ணிக்கை சற்றே 42,100 ஆக குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"இது இரண்டாவது அலை முடிவடையவில்லை என்பதைக் காட்டுகிறது; ஒரு நாளைக்கு 35,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஒரு சிறிய எண்ணிக்கையல்ல… நாம் அனுபவித்த மிக உயர்ந்த பாதிப்பு அளவுகளுடன் ஒப்பிடுகையில் இது சிறியதாகத் தோன்றுகிறது. ஆனால் வீழ்ச்சியின் வீதம் சற்றே மெதுவாக இருப்பதால், அதைக் கட்டுப்படுத்துவதில் நாம் கடுமையாக உழைக்கவில்லை என்றால் வைரஸ், அது மேலதிகமாக பரவலாம்,” என்று டாக்டர் பால் கூறினார்.

நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக மலைவாசஸ்தலங்களில் மக்கள் கொரோனா விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதை டாக்டர் பால் சுட்டிக்காட்டினார். சமீபத்திய நாட்களில் முசோரி, மணாலி போன்ற இடங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

"நாட்டிற்குள், மக்கள் சாதாரணமாக இருப்பதை நாங்கள் காண்கிறோம். சிறிய மற்றும் பெரிய நகரங்கள், சந்தைகள், குறிப்பாக சுற்றுலா தலங்கள் போன்ற மக்கள் ஓய்வெடுக்கப் போகும் இடங்களில் கொரோனா விதிமீறல்கள் அதிகமாக உள்ளது. அங்கு ஒரு புதிய ஆபத்து வெளிப்படுவதைக் காணலாம். இந்த வகை கூடுதல் தொடர்ந்து நடந்தால், சமூக இடைவெளி விதிமுறைகள் மீறப்பட்டால், வைரஸ் பரவல் அதிகரிக்ககூடும் ”என்று டாக்டர் பால் கூறினார்.

"நாம் ஒரு சீரான அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும். சுற்றுலா தேவை; இருப்பினும், மீறல்கள் இருந்தால், பாதிப்பு அதிகரிக்கலாம். இந்த தருணத்தில் நாம் விதி மீறல்களை நிறுத்த வேண்டும். கூட்டமாக ஒன்றிணைந்து வருவது, சமூக இடைவெளியை பராமரிக்காதது, போன்ற காட்சிகள் கவலைக்குரியது. இந்த விஷயம் நேற்று (வியாழக்கிழமை) பிரதமர் எடுத்த அமைச்சரவை விரிவாக்க நிகழ்வுக்கு இணையான கவனத்தை பெற்று வருகிறது.”என்று டாக்டர் பால் கூறினார்.

"இந்த சுற்றுலா இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாக செயல்படுத்து உள்ளூர் நிர்வாகத்தின் பொறுப்பு. சந்தை நலச் சங்கங்களும் பொறுப்பேற்க வேண்டும். சுற்றுலா மற்றும் வாழ்வாதாரம் முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம்; இருப்பினும், கொரோனா விதிமுறைகளில் எந்த அலட்சியமும் இருக்க முடியாது. இரண்டும் ஒன்றிணைந்து இருக்க முடியாது, ”என்று டாக்டர் பால் கூறினார்.

இங்கிலாந்து, ரஷ்யா, பங்களாதேஷ், தென் கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் பாதிப்புகள் மீண்டும் எழுந்திருப்பதை அரசாங்கம் சுட்டிக்காட்டியது. “நிலைமை கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளில், வைரஸ் புதிதாக மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இவற்றில் நமது அண்டை நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் அடங்கும். ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு பாதிப்புகளைப் பார்த்தால், இந்த கட்டத்தில், இது நமது இரண்டாவது அலையில் உச்சத்தின் போது நாம் கண்ட நிகழ்வுகளை விட அதிகம். வைரஸ் மீண்டும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களை அதிகம் பாதிக்கிறது. நம் நாட்டில் நாம் பாதுகாப்பைக் குறைக்க முடியாது என்பதை இது காட்டுகிறது, ”என்று டாக்டர் பால் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment