”எழுதி வச்சுக்கோங்க, பாஜகவின் மோசமான ஆட்சி முறை பாடங்களாகும்” – ராகுல் ட்வீட்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பாஜக மேற்கொண்டிருக்கலாம் என்று காங்கிரஸ் வெகு காலமாக குறை கூறி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Covid19, GST, Demo will be studied in Harvard business school Rahul Gandhi tweets  : கொரோனா தடுப்பினை கட்டுப்படுத்துதல், ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழக்க நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதாளாத்திற்கு சென்றுள்ளது என்று காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். நாட்டின் பொருளாதாரம் மட்டுமில்லாமல் சிறுகுறு வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்கள் என்றும் பாஜக அரசின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமாக இருக்கும் ராகுல் காந்தி வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மோடி பேசிக் கொண்டிருக்கும் காணொளி காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்க ஒவ்வொரு நாளும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வரும் கிராஃபும் திரையிடப்படுகிறது.

மேலும் படிக்க : இந்தியப் பிரதேசம் மீது கண் வைத்தவர்களுக்கு லடாக்கில் பதிலடி தரப்பட்டது – பிரதமர் மோடி உரை

அந்த வீடியோவிற்கு ஏற்ற கேப்சனாக வருங்காலத்தில் ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் ஆராய்ச்சி செய்யப்படும் முக்கியமான விசயங்கள் என்று கொரோனா, பணமதிப்பிழக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி முறை ஆகியவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid19 gst demo will be studied in harvard business school rahul gandhi tweets

Next Story
லடாக் எல்லை மோதல்: சிறப்பு பிரதிநிதிகள் வழி பேச்சுவார்த்தைக்கு இந்தியா பரிசீலனை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com