Advertisment

ஆக்ஸிஜன் தேவை, பற்றாக்குறை குறித்து ஒரு வருடத்திற்கு முன்பே எச்சரித்த நிபுணர் குழு

மகாராஷ்டிரா, இந்த ஆண்டு மார்ச் 30 அன்று, மாநிலத்திற்குள் அமைந்துள்ள உற்பத்தி பிரிவுகளிலிருந்து ஆக்ஸிஜன் புழக்கத்தையும் விநியோகத்தையும் முறைப்படுத்த உத்தரவு பிறப்பித்தது.

author-image
WebDesk
New Update
ஆக்ஸிஜன் தேவை, பற்றாக்குறை குறித்து ஒரு வருடத்திற்கு முன்பே எச்சரித்த நிபுணர் குழு

 Harikishan Sharma 

Advertisment

covid19 second wave oxygen supply : கொரோனா இரண்டாம் தொற்றில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஒரு எச்சரிக்கையை உருவாக்கியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டும் ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் இதே போன்ற ஒரு சூழலை நாம் சந்திக்க நேரிட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு முதல் வாரம் முடிந்த நிலையில் ஏப்ரல் 1ம் தேதி 2020 அன்று 11 அதிகாரம் பெற்ற அலுவலர்கள் குழுக்களில் (Empowered Groups of Officers ) ஒன்றை உருவாக்கியது மத்திய அரசு. இதன் பணி சிறப்பான வகையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு தொடர்பான பணிகளை திட்டமிடுவதாகும்.

அதிகாரம் பெற்ற குழு 6-க்கு (Empowered Group-VI (EG-VI)) ஒதுக்கப்பட்ட பணி தனியார் துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கொரோனா தொற்று பரவல் தடுப்பு திட்டங்களை உருவாக்குவது. இதன் இரண்டாவது ஆலோசனை கூட்டத்தில் ஏப்ரல் 1 அன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து எச்சரிக்கை செய்தது.

மேலும் படிக்க : தமிழகத்தில் ஒரே நாளில் 59 பேர் மரணம்: மேற்கு, தெற்கு மாவட்டங்களிலும் அதிகரிக்கும் கொரோனா

covid19 second wave oxygen supply : House panel flagged need, shortage

வரும் நாட்களில் இந்தியா ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும். இதை நிவர்த்தி செய்ய, சி.ஐ.ஐ இந்திய எரிவாயு சங்கத்துடன் ஒருங்கிணைந்து ஆக்ஸிஜன் வழங்கல் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது.

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தலைமையிலான இந்த கூட்டத்தில் இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜய் ராகவன் கலந்து கொண்டார்; செயலாளர், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை; என்.டி.எம்.ஏ உறுப்பினர் கமல் கிஷோர்; மற்றும் பிரதம மந்திரி அலுவலகம், வெளியுறவுத்துறை, உள்துறை, அமைச்சரவை செயலாளர், மறைமுக வரி மற்றும் சுங்கவாரியம், நிதி ஆயோக் போன்ற துறைகளில் இருந்தும் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி உட்பட தொழில்த்துறை பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.

மேலும் படிக்க : மே 1ம் தேதிக்கு பிறகு கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை என்ன?

ஆக்ஸிஜன் பற்றாக்குறை எச்சரிக்கைக்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்ட போது, இதனை இனிமேல் டி.பி.ஐ.ஐ.டி. (Department for Promotion of Industry and Internal Trade) துறை பார்த்துக் கொள்ளும் என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறினார். இந்த சந்திப்புக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து மருத்துவ ஆக்ஸிஜன் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒன்பது பேர் கொண்ட குழு டிபிஐஐடி செயலாளர் குருபிரசாத் மொஹாபத்ராவின் தலைமையில் அமைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் காட்டுகின்றன.

டிபிஐஐடி மற்றும் சிஐஐ ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களிடம் இது தொடர்பாக கருத்துகள் கேட்க முற்பட்டது தி இந்தியன் எக்ஸ்பிரஸ். ஆனால் பதில்கள் ஏதும் கிடைக்கவில்லை. அதிகாரம் பெற்ற குழு 6, ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து எச்சரிக்கை செய்த போது இந்தியாவில் மொத்தமாக வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 2000 தான். தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கையை தொடர்ந்து பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்தது. கொரோனா காலத்திற்கு முன்பு 1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பயன்பாடு இருந்தது. ஆனால் கொரோனா தொற்று நாட்டில் உச்சம் அடைந்த செப்டம்பர் 24 - 25 தேதிகளில் 3000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டது.

covid19 second wave oxygen supply : House panel flagged need, shortage

மேலும் நாள் ஒன்றுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி 6900 மெட்ரிக் டன் என்ற நிலையை எட்டியது. அதிகாரம் பெற்ற குழு 6 மட்டும் இல்லாமல் சுகாதாரத்துறை நாடாளுமன்ற நிலைக்குழுவும் ஆக்ஸிஜனின் கிடைக்கும் தன்மை மற்றும் குறைந்த விலை குறித்தும் எச்சரிக்கை செய்தது. மருத்துவமனைகளின் தேவையை பொறுத்து ஆக்ஸிஜன் உற்பத்தியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசிடம் கேட்டுக் கொண்டது.

அக்டோபர் 16, 2020 அன்று சமாஜ்வாடி கட்சியின் ராம் கோபால் யாதவின் தலைமையில் நடைபெற்ற குழுவின் கூட்டங்களில் ஒன்றில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கோவிட் -19 சிகிச்சையில் “ஆக்கிரமிப்பு அல்லாத ஆக்ஸிஜனை” பயன்படுத்துவதையும் அது எவ்வாறு நல்ல முடிவுகளை தருகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.

இந்த கமிட்டி நவம்பர் 21ம் தேதி 2020 அன்று மாநிலங்களவை தலைவருக்கு கொடுத்த அறிக்கையில், நான் - இன்வாசிவ் ஆக்ஸிஜன் நல்ல முடிவுகளை தருகிறது என்பதால் சுகாதாரத்துறை இதன் விலையை நிர்ணயிக்க தேசிய மருந்து விலை ஆணையத்திடம் ( National Pharmaceutical Pricing Authority (NPPA)) கேட்டுக் கொண்டதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறப்பட்டுள்ளது.

கோவிட்டுக்கு முந்தைய நாட்களில், மருத்துவ ஆக்ஸிஜனின் நுகர்வு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1,000 மெட்ரிக் டன் என்றும், மீதமுள்ள 6,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தொழில்துறையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். ஆகையால், ஆக்ஸிஜன் சரக்கு நடைமுறையில் உள்ளதா என்பதையும் ஆக்ஸிஜன் விலைகள் கட்டுப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று பெருந்தொற்று கோவிட்19 மற்றும் அதன் மேலாண்மை The Outbreak of Pandemic Covid-19 and Its Management அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க : தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை? மூடப்பட்ட மையங்கள்; திருப்பி அனுப்பப்பட்ட மக்கள்

ஆகையால், ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் விலையைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய மருந்து விலை ஆணையத்தை குழு கடுமையாக அறிவுறுத்துகிறது, இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு ஆகியவை மருத்துவ நுகர்வுக்காக உறுதி செய்யப்பட்டன. அரசிடம் ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்திக்கு ஊக்குவிப்பு தர வேண்டும் என்று மத்திய அரசிடம் கமிட்டி கேட்டுக் கொண்டது என்றும் அறிக்கையில் கூறப்பட்டது. ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பொருத்தமான விலை வரம்புகளுடன் போதுமான அளவில் வழங்குவதை சுகாதார அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.

இந்த ஆண்டில் எடுத்துக் கொண்டால் மகாராஷ்டிரா, இந்த ஆண்டு மார்ச் 30 அன்று, மாநிலத்திற்குள் அமைந்துள்ள உற்பத்தி பிரிவுகளிலிருந்து ஆக்ஸிஜன் புழக்கத்தையும் விநியோகத்தையும் முறைப்படுத்த உத்தரவு பிறப்பித்தது. 80% உற்பத்தி மருத்துவ ஆக்ஸிஜனுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

covid19 second wave oxygen supply : House panel flagged need, shortage

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளன்று புதிய கோவிட் -19 வழக்குகளின் தேசிய தினசரி எண்ணிக்கை சுமார் 53,000 ஆக இருந்தது - இரண்டாவது அலை இப்போதுதான் தொடங்கியது.

ஆனாலும் கூட தொழிற்சாலைக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்வதற்கான தடையை ஒருவாரத்திற்கு முன்பு அறிவித்து 22ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு உள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனில் 60% மருத்துவ தேவைக்கு வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இரண்டாவது அலைகளில், நோயாளிகளுக்கு அதிக அளவு ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படுவதால் இது உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : மாநில அரசுகளுக்கு ஒரு விலை; மத்திய அரசுக்கு ஒரு விலை – நியாயமற்றது என கண்டனம்

ஆக்ஸிஜனின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்காமல் விட்டுவிட்டோம் என்று நாம் வருந்த நேரிடும் என்று நான் பயந்தேன். முதல் அலை ஆக்ஸிஜன் எவ்வாறு உயிர்களை காக்க மிக முக்கியமானது என்று நமக்கு உணர்த்தியது. ஆனால் தேவையான அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய துவங்க ஒரு வருடம் தேவைப்பட்டது என்பது தான் உண்மை. ஆனால் அவசரகால ஏற்பாடுகளைச் செய்ய நமக்கு சுமார் ஐந்து அல்லது ஆறு மாதங்கள் இருந்தன, ”என்று புனேவைச் சேர்ந்த மஹாராத்தா சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ், கைத்தொழில் மற்றும் வேளாண்மை (எம்.சி.சி.ஐ.ஏ) இன் தலைவர் சுதீர் மேத்தா கூறினார்.

தற்போதுள்ள உற்பத்தி அலகுகள் திறன்களை அதிகரிக்க ஊக்குவிக்கப்பட்டிருக்கலாம். ஆக்ஸிஜனின் கூடுதல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். விநியோக தடைகள் மென்மையாக்கப்பட்டிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் இப்போது கடந்த ஆண்டு தொற்றுநோயின் தொடக்கத்திற்கு மிகவும் ஒத்த சூழ்நிலையில் இருக்கிறோம். கடந்த ஆண்டை விட தற்போது ஆக்ஸிஜன் தேவை அதிகமாக உள்ளது. (with Amitabh Sinha, Gaya)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment