இந்தியாவின் முதன்மையான விலங்கு ஆராய்ச்சி அமைப்பான இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI), மாட்டு சிறுநீரில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால், அது மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல என்று கூறியுள்ளது.
ICAR இன் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) இந்த ஆய்வை நடத்தியது. பசுக்கள் மற்றும் காளைகளின் சிறுநீர் மாதிரிகளில் குறைந்தது 14 வகையான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதாக நிறுவனம் கண்டறிந்துள்ளது. மாட்டு சிறுநீரில் காணப்படும் எஸ்கெரிச்சியா கோலி (இ. கோலை) பாக்டீரியம், பொதுவாக மனிதர்களுக்கு வயிற்று நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: புதுடெல்லியின் கண்காணிப்பு பட்டியலில் ஆபத்தான முதியவர் ஜார்ஜ் சொரோஸ்; ஐ.நா-வுக்கு பிரச்னை இல்லை
மூன்று PhD மாணவர்களுடன் போஜ் ராஜ் சிங் தலைமையிலான சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வு, ஆன்லைன் ஆராய்ச்சி இணையதளமான ரிசர்ச்கேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியில், பசுக்கள், எருமைகள் மற்றும் மனிதர்களின் 73 சிறுநீர் மாதிரிகளின் புள்ளிவிவர பகுப்பாய்வு, எருமையின் சிறுநீரில் பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடு பசுக்களை விட அதிகமாக உள்ளது என்று கூறுகிறது. எருமையின் சிறுநீரில் எஸ் எபிடெர்மிடிஸ் (S Epidermidis) மற்றும் இ ரபோண்டிசி (E Rhapontici) போன்ற பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன, எனக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே மாட்டு சிறுநீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்பதை பொதுமைப்படுத்த முடியாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுநீரை மனிதன் சாப்பிட பரிந்துரைக்க முடியாது. சிலர் காய்ச்சி வடிகட்டிய சிறுநீரில் தொற்று பாக்டீரியாக்கள் இல்லை என்று கூறுகிறார்கள். அதுகுறித்து மேலும் ஆய்வு நடந்து வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் (FSSAI) வர்த்தக முத்திரை இல்லாமல், இ-காமர்ஸ் இணையதளங்கள் உட்பட இந்திய சந்தையில் பசுவின் சிறுநீர் எளிதாகக் கிடைக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil