/tamil-ie/media/media_files/uploads/2018/12/cats-28.jpg)
CPIM Karnataka state unit secretary G V Sreerama Reddy
CPIM Karnataka state unit secretary G V Sreerama Reddy : கர்நாடக மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக பணியாற்றிய ஜி.வி ஸ்ரீராம ரெட்டியினை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறது கட்சி மேலிடம். தவறான நடவடிக்கைகள் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரீராம ரெட்டி இது வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டிருக்கிறார். மேலும் சி.பி.எம். கட்சியின் மத்திய குழுவிலும் முக்கிய அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
CPIM Karnataka state unit secretary G V Sreerama Reddy குற்றச்சாட்டு - பதவி நீக்கம்
சி.பி.எம். கட்சியின் மத்திய குழு, ஸ்ரீராம ரெட்டியினை கட்சியில் இருந்து நீக்கியதோடு, அவர் இது வரை வகித்து வந்த பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளது. எந்த புகாரின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டது என்பதை கட்சி மேலிடம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், கட்சி வட்டாரத்தில் வெளியான தகவல்கள் “பாலியல் புகார் மற்றும் கட்சி நிதியை கையாடல் செய்த காரணத்தால் அவரை கட்சியில் இருந்து மேலிடம் நீக்கியுள்ளது” என்று கூறுகின்றனர்.
புதிய செயலர் நியமனம்
பாகபள்ளி தொகுதியில் 1994 மற்றும் 2004ம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார் ஸ்ரீராம ரெட்டி. கிட்டத்தட்ட 50 வருடங்களாக கட்சிப் பணி செய்து வந்தார். ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட புகார்கள் அத்தனை வலுவாக அமைந்த காரணத்தால் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என்று கட்சியினர் கூறி வருகின்றனர்.
மாநில கமிட்டி மீட்டிங்கில் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், எஸ்.ஆர்.பிள்ளை, எம்.ஏ. பேபி மற்றும் பி.வி. ராகவுலூ ஆகியோர் அடங்கிய குழு டிசம்பர் மாதம் 18ம் தேதி புதிய செயலாளராக பசவராஜாவினை தேர்வு செய்தது அறிவித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.