சி.பி.எம் அரசின் அதிரடி திருப்பம்: தனியார் பல்கலைக்கழகங்களுக்கு கேரளாவில் அனுமதி

கேரளாவில் சி.பி.எம் தலைமையிலான அரசு தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் நிலைப்பாடு குறித்து இக்குறிப்பில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Kerala Univ

தனியார் உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் இரத்தக் கறை படிந்த போராட்டங்களுக்கு பிறகு, தற்போது சி.பி.எம் சார்பாக கேரளாவில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. கடந்த திங்களன்று, இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைமையிலான கேரள அரசு, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: CPM’s big U-turn: Kerala moves to allow private universities, ‘have to absorb changes to survive’ 

 

Advertisment
Advertisements

இந்த முடிவை நியாப்படுத்தும் விதமாக சி.பி.எம் தலைவரும், உயர்கல்விதுறை அமைச்சருமான ஆர். பிந்து, "நமது சமூகம் உலகமயமாக்கப்பட்டிருக்கிறது. போட்டி நிறைந்த இந்த சூழலில் பிழைத்திருக்க வேண்டுமானால் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களின் சமூகக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து மசோதாவில் திட்டமிடப்பட்டுள்ளது.  அது காலத்துக்கு ஏற்ப தவிர்க்க முடியாத முடிவு. மாற்றங்களிலிருந்து நாம் விலகி இருக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

"இந்த சூழலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. மாற்றத்திற்கு ஏற்ப நாங்கள் முடிவு எடுக்கிறோம். நன்கு வரையறுக்கப்பட்ட முன்னோக்கத்தை சி.பி.எம் கொண்டுள்ளது. அதே சமயம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் நுழைவுக்கு எங்கள் நிலைப்பாடு எதிராக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

கடந்த 1995-ஆம் ஆண்டில் காங்கிரஸின் ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைமையிலான அரசு, கண்ணூரில் கூட்டுறவுத் துறையில் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கியபோது, சி.பி.எம் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் சி.பி.எம் இளைஞர் அமைப்பினர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

அப்போதைய காலகட்டத்தில் இருந்து, கேரளாவில் கல்வியை தனியார்மயமாக்குவதற்கு சி.பி.எம் எதிர்ப்பு தெரிவித்தது வரலாற்று பக்கங்களில் இருக்கிறது. அன்று நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த 24 வயதான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர், கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிரான கட்சியின் நிலைப்பாட்டின் அடையாளமாக மாறினார். 30  ஆண்டுகளாக படுத்தபடுக்கையாக இருந்த அவர், கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.

2002 முதல் 2006 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கேரளாவில் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடிவு செய்தபோதும், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 2014ல், மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி வழங்க காங்கிரஸ் அரசு முடிவு செய்தபோது, ​​சி.பி.எம் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. 

கேரளாவில் தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதற்காக அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் கல்வி அமைச்சர் பி.கே அப்து ரப் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக  இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

அரசின் சமீபத்திய முடிவு குறித்து ஸ்ரீனிவாசன் நேற்று பதிலளித்தார். அவர் கூறுகையில் "கேரளாவில் மாணவர்கள் மேற்படிப்புக்கு சேர்க்கை பெறுவதில் சிரமம் ஏற்பட்டபோது 2011 ஆம் ஆண்டிலேயே நாங்கள் தனியார் பல்கலைக்கழகங்களுக்கான வரைவைக் கொண்டு வந்தோம். இடதுசாரிகள் எப்போதும் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர். இப்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போதிய மாணவர்கள் இல்லை.  எங்கள் மசோதா கடுமையான விதிமுறைகளைக் கொண்டிருந்தது. புதியது மிகவும் தாராளவாதமாகத் தெரிகிறது" எனக் கூறினார்.

உயர்கல்வியில் சீர்திருத்தங்களுக்கு முன், சி.பி.எம் பல அரங்கங்களில் மாற்றங்களை எதிர்த்தது. 1990 களில் கணினிமயமாக்கலை எதிர்த்தது. அதற்கு முன்பு விவசாயத்தில் இயந்திரமயமாக்கப்பட்டதையும் எதிர்த்த வரலாறு கட்சிக்கு இருக்கிறது. 2000-க்குப் பிறகு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கியின் உதவிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. 2003ல் பினராயி விஜயன் சி.பி.ஐ மாநிலச் செயலாளராக இருந்தபோது, ​​அக்கட்சி ஏடிபி கடன்களை எதிர்த்தது. காங்கிரஸ் அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்காக கேரளா சென்ற ஏ.டி.பி ஆலோசகர்களை கூட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடுமையாக எதிர்த்தனர்.

2016ல் விஜயன் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக சி.பி.எம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டக் கொடிகளை இறக்கின. கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலிருந்தும் ஆதாரங்களைப் பெறுவதற்கு கட்சி இப்போது முயன்று வருகிறது.

- Shaju Philip

Kerala University

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: