Advertisment

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.பி.எம் கோழிக்கோடு மேயர்; கட்சியில் சலசலப்பு

குழந்தைகளுக்கான சங்பரிவார் அமைப்பான பாலகோகுலம், குழந்தைகளை கிருஷ்ணரால் உந்துதல் பெறச்செய்து அவர்கள் இந்து மதத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது.

author-image
WebDesk
New Update
CPM Kozhikode Mayor Beena Philip, Kerala CPM, Beena Philip news, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கோழிக்கோடு சி.பி.எம் மேயர்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சலசலப்பு, பீனா பிலிப், RSS, Arya Rajendran, Kerala politics, Tamil indian express, political pulse

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கோழிக்கோடு மேயர் கேரளாவில் ஒரு இடத்தில் சங்பரிவார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு, அங்கே அவர், இந்து புராணங்களில் உள்ள கதாபாத்திரங்களை உள்வாங்க வேண்டும் என்றும் தாய்மார்கள் கிருஷ்ணரின் பக்தர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

குழந்தைகளுக்கான சங்பரிவார் அமைப்பான பாலகோகுலம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அன்னையர் கூட்டத்தில் கலந்து கொண்ட கோழிக்கோடு மாநகராட்சி மேயர் பீனா பிலிப் பேசியதாவது: கிருஷ்ணரின் உருவம் மனதில் இருக்க வேண்டும். இந்து புராணங்களில் உள்ள கதாபாத்திரங்கள் உள்வாங்கப்பட வேண்டும். தாய்மார்களுக்கு குழந்தை கிருஷ்ணர் மீது பக்தி இருந்தால், அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் கோபப்பட மாட்டார்கள். ஒவ்வொரு குழந்தையும் குட்டி கிருஷ்ணனாகவே கருதப்பட வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் மனதில் பக்தியும் அன்பும் வளரும்.” என்று கூறினார்.

குழந்தைகளுக்கான சங்பரிவார் அமைப்பான பாலகோகுலம், குழந்தைகள் கிருஷ்ணரால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் இந்து மதத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது.

பொது மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவுகளில் தனித்தனி விளையாட்டு அணிகளை ஊக்குவிப்பது பற்றி பேசி, மற்றொரு சிபிஎம் மேயரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் கிளப்பிய சர்ச்சையால், ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய நிகழ்வில் பீனா பிலிப் கலந்துகொண்ட சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்து நாயர் சமூகத்தைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன், தனது கருத்து எஸ்சி/எஸ்டி நிதியை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான யோசனை என்று முதலில் நியாயப்படுத்தினார். ஆனால், சர்ச்சை எழுந்ததால் அவர் தனது திட்டத்தை கைவிட வேண்டியிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணரின் சிலைக்கு மாலை அணிவித்த பீனா பிலிப், குழந்தை பராமரிப்பில் வட இந்தியாவை விட கேரளா பின்தங்கியுள்ளது என்றார். மாநிலத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், “புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுப்பது போதாது. குழந்தை பருவத்தில் நாம் அவர்களுக்கு என்ன வழங்குகிறோம் என்பதுதான் முக்கியம். வட இந்தியர்களுக்கு குழந்தைகளை எப்படி நேசிக்க வேண்டும் என்று தெரியும்.” என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய விழாவில் சி.பி.எம் தலைவர் கலந்துகொண்டது மற்றும் அவரது கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திங்கள்கிழமை பீனா பிலிப் தான் கூறியது குறித்து விளக்கம் அளித்தார். அத்தகைய நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்பது குறித்து தனது கட்சியிடமிருந்து எந்த அறிவுறுத்தலும் இல்லை என்று கூறினார். “நான் தாய்மார்களிடம் பேசினேன். பாலகோகுலம் ஒரு ஆர்எஸ்எஸ் அமைப்பாக நான் ஒருபோதும் உணரவில்லை” என்று பீனா பிலிப் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி மோகனன் மேயரின் நடவடிக்கையிலிருந்து கட்சி உடன்படவில்லை என்பதை பகிரங்கமாகக் கூறினார். “பாலகோகுலம் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டிருக்கக் கூடாது. இது கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிரானது… அவரது நிலைப்பாட்டை நாங்கள் பகிரங்கமாக நிராகரிக்கிறோம்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிபிஎம் மற்றும் காங்கிரஸுக்கு இடையே தங்களுடைய மதச்சார்பற்ற தன்மையை நிரூபிப்பதற்காக மாநிலத்தில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ஸுக்கு இடையே தொடர்புள்ள இந்த சம்பவத்தை ஆதாரமாகக் கூறினார்கள் “குழந்தை பராமரிப்பில் கேரளா பின்தங்கியுள்ளது என்ற மேயரின் நிலைப்பாட்டை கட்சி ஒப்புக்கொள்கிறதா என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவுபடுத்த வேண்டும்” என்று காங்கிரஸ் கோழிக்கோடு மாவட்டத் தலைவர் பிரவீன் குமார் கூறினார். அதே நேரத்தில், பீனா பிலிப் பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகர் என்றும் கூறினார்.

சமீபத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்) தலைவர் கே.என்.ஏ. காதர், கோழிக்கோட்டில் ஆர்எஸ்எஸ் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, சூழ்நிலை மாறி இருந்தது. இது காங்கிரஸ் தலைமையிலான யு.டிஎஃப்-இன் மென்மையான இந்துத்துவா போக்கின் அடையாளம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது.

பீனா பிலிப் கேரளாவின் ஆரம்பகால கம்யூனிஸ்ட் அக்ட்சி குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். அவரது தந்தை எம்.ஜே.பிலிப் எர்ணாகுளத்தில் உள்ள கூத்தாட்டுக்குளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்தபோது அக்கட்சி தடைசெய்யப்பட்டது. 1964ல் சிபிஐயில் ஏற்பட்ட பிளவின் போது எம்.ஜே, பிலிப் சிபிஎம் கட்சிக்கு மாறினார்.

பீனா பிலிப் கல்லூரியில் படிக்கும் போதே சிபிஎம் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ-யின் தீவிரமான தொண்டராக இருந்தார். அவர் அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்து, கோழிக்கோட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இது கேரளாவில் கார்ப்பரேட் ஆதரவுடன் உள்கட்டமைப்பை மேம்படுத்திய முதல் அரசுப் பள்ளிகளில் ஒன்று.

பீனா பிலிப் 2020ல் கோழிக்கோடு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Rss Cpm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment