மத்திய, மாநிலத்தில் ஒரே அரசாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பரிசோதனை கூடமாக மாற்றப்பட்டுள்ளது என்று சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில 24வது மாநாடு தொண்டர்கள் அணிவகுப்புடன் கொட்டும் மழையில் இன்று வில்லியனூரில் தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டு ஊர்வலத்திற்கு செயற்குழு உறுப்பினர் தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் சுதா சுந்தரராமன் பேரணியை தொடங்கி வைத்தார் .
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை தொடங்கி வைத்த சி.பி.எம்-ன் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், "மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு இருந்தால் டபுள் என்ஜின் அரசாக இருக்கும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். டபுன் என்ஜின் அரசால் மக்களுக்கு நன்மை இல்லை, கெடுதல் தான்.
மத்திய, மாநிலத்தில் ஒரே அரசாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பரிசோதனை கூடமாக மாற்றப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
செய்தி:பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“