Advertisment

மேற்கு வங்கத்தில் ராகுல்காந்தி யாத்திரை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்திப்பு

கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி மற்றும் பிற தலைவர்களுடன் ரகுநாத்கஞ்சில் ராகுல் காந்தியை சந்தித்த சி.பி.ஐ (எம்) மாநிலச் செயலர் முகமது சலீம், ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க மற்றும் அநீதிக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இடது சாரி கட்சி காங்கிரஸ் யாத்திரையில் இணைந்ததாகக் கூறினார்.

author-image
WebDesk
New Update
Rahul Gandi West Bl

முர்ஷிதாபாத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரத் ஜோடோ நியதி யாத்திரையின் போது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் மற்றும் சிபிஐ (எம்) - இந்திய பிளாக் கூட்டணி மீது திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் மம்தா பானர்ஜி தொடுர்ந்து கடுமையான விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில், இடதுசாரி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அலை ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியதி யாத்திரையில் இணைந்துள்ளது. இந்த யாத்திரை நேற்று முன்தினம் (புதன்கிழமை) மீண்டும் மேற்கு வங்கத்தில் நுழைந்தது.

Advertisment

கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி மற்றும் பிற தலைவர்களுடன் ரகுநாத்கஞ்சில் ராகுல் காந்தியை சந்தித்த சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் முகமது சலீம், ஆர்எஸ்எஸ்-பாஜக மற்றும் அநீதிக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இடதுசாரி கட்சி காங்கிரஸ் யாத்திரையில் இணைந்துள்ளது என்று கூறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்க : CPM leaders meet Rahul Gandhi, say Mamata Banerjee ready to exit INDIA bloc

மேலும் ராகுல்காந்தியுடனான 45 நிமிட சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாங்கள் ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு எதிராக போராடுகிறோம். ஆர்எஸ்எஸ்-பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்காக ராகுல் காந்தியும் பாரத் ஜோடோ ஜியோ யாத்திரையில் இறங்கினார். இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற போராடுகிறோம். இந்த யாத்திரைக்கு எங்கள் ஒற்றுமையைக் காட்டவே நாங்கள் இங்கு வந்தோம்.

எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி என்ற 'ரயிலில்' இருந்து இறங்குவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆர்வமாக இருக்கிறது. "நிறைய பேர் ரயில் நிலையத்தில் இருந்து இந்த கூட்டணி ரயிலில் ஏறினர், ஆனால் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் யார் தொடர்ந்து பங்கேற்பார்கள், யார் இதில் இருந்து இறங்குவார்கள் என்று சொல்ல முடியாது. மம்தா பானர்ஜி இப்போது ரயிலில் இருந்து கீழே இறங்க விரும்புகிறார், அதை நாங்கள் வரவேற்கிறோம்.

சிபிஐ(எம்) எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சொல்கிறார். காங்கிரஸ் ஒரு மிகப் பெரிய பான் இந்தியா கட்சி. சிபிஐ (எம்) (CPI(M) க்கு இவ்வளவு பலம் உள்ளதா என்று யோசிக்க வேண்டும். ஆனாலும் காங்கிரஸை சிபிஐ(எம்) கட்டுப்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார். நாடு தற்போது நீதிக்கும் அநீதிக்கும் இடையில் பிளவுபட்டுள்ளது. அநீதிக்கு எதிரான இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ளோம்என்று முகமது சலீம் கூறியுள்ளார்.

மேலும் வேலைக்காகவும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்காகவும் உண்மையான போராட்டம் நடக்கும் போது, சில கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றன. இந்தியாவில் கூட்டாட்சி அமைப்பு, மதச்சார்பின்மை, நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்ந்து நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்க இந்தியா கூட்டணிக்கு 2024-ம் ஆண்டு ஒரு போராட்ட ஆண்டாக இருக்கும். மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பில் நம்பிக்கை கொண்ட நாங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு பக்கம் இருக்கிறோம்.

மறுபுறம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை அதிகரிக்க பாஜக, மத்திய அமைப்புகளையும், ஊழல் வழக்குகளையும் பயன்படுத்துகிறது,'' இதன் காரணமாக அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் வழியாக யாத்திரை செல்லும்போது பல தடைகள் வருகிறது. ஆனால், இது நமது அரசியல் கலாச்சாரம் அல்ல, இதுபோன்ற தடைகளை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முர்ஷிதாபாத் மாவட்டச் செயலாளர் ஜமீர் மொல்லா, சிபிஐ (எம்) மாநிலக் குழு உறுப்பினர் ஷதரூப் கோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  வங்காளத்தில் ராகுல் காந்தியின் முதல் கட்ட யாத்திரையின் போது, ஜிபேஷ் சர்க்கார் போன்ற சிபிஐ(எம்) தலைவர்கள் சிலிகுரியில் ராகுல்காந்தியை சந்தித்தனர்.மிகவும் சுமுகமான சூழ்நிலையில் இந்த சந்திப்பு நடந்தது. நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

தனது யாத்திரையின் போது திரிணாமுல் காங்கிரஸ் செய்த செயல் குறித்து ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தார். அசாமில் நடந்தது எதிர்பார்த்ததுதான் ஆனால் வங்காளத்தில் நடந்தது எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டதுஎன்று ஒரு மூத்த இடதுசாரி தலைவர் கூறியுள்ளார். இதனிடையே நேற்று, மால்டா மாவட்டத்தில் உள்ள சுஜாபூரில் இருந்து யாத்திரை தொடங்கியது.

அங்கு இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த ஏபிஏ கனி கான் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். சவுத்ரி முதன்முதலில் 1967 இல் சுஜாபூரில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், அவர் எம்.பி மற்றும் மத்திய ரயில்வே அமைச்சரானார். 2021ல் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி சுஜாபூர் தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் இழந்தது.

ஃபராக்காவிலிருந்து முர்ஷிதாபாத் மாவட்டத்திற்குள் யாத்திரை நுழைந்ததும் ராகுல் காந்தியை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் சாலை நெடுகிலும் வரிசையில் நின்றனர். இந்த யாத்திரை மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் லோக்சபா தொகுதியான பெர்ஹாம்பூரை அடைய 100 கி.மீ.க்கு மேல் பயணித்தது. சாலைகள் முழுவதும் ராகுல், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் பிரமாண்ட கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கிய பாரத் ஜோடோ ஜியோ யாத்ரா’ 67 நாட்களில் 6,713 கி.மீ தூரத்தை கடந்து, 15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்களை கடந்து மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடையும். இதுவரை 6 மேற்கு வங்க மாவட்டங்களில் 523 கி.மீ தூரம் பயணித்த இந்த யாத்திரை, டார்ஜிலிங், ஜல்பைகுரி, அலிபுர்துவார் மற்றும் உத்தர் தினாஜ்பூர் ஆகிய இடங்களைக் கடந்து, இரண்டாம் கட்டமாக மால்டா மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment