Advertisment

லவ் ஜிகாத் என்பதே இல்லை: கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

தாமஸ் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் அல்லது கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கேரள பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்தர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
லவ் ஜிகாத் என்பதே இல்லை: கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

லவ் ஜிகாத் என்பது இல்லவே இல்லை என்றும் சிறுபான்மையினரை குறிவைத்து சங்கப் பரிவார் இவ்வாறு கூறி வருகின்றன என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி தெரிவித்தது.

Advertisment

ஜோஸ்னா, டி.ஒய்.எஃப்.ஐ தலைவர் எம்.எஸ்.ஷெஜின் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஷெஜின் முஸ்லிம் ஆவார். ஜோஸ்னா கிறிஸ்தவ பெண்.

இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்தால் மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜார்ஜ் எம் தாமஸ் தெரிவித்தார்.

மேலும், நாங்கள் பெண்ணின் பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். ஷெஜின் தவறான முடிவை எடுத்துவிட்டார். அவர் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்திருக்கக் கூடாது. கட்சி இதுதொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்தக் கருத்து சர்ச்சை ஆனது. இதையடுத்து, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொள்ள எப்போதும் ஆதரவு தருவோம் என்று டிஒய்எஃப்ஐ அறிக்கை வெளியிட்டது.

இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். மதச்சார்பற்ற திருமணங்களை ஊக்குவிக்க டிஒய்எஃப்ஐ இணையதளம் கூட தொடங்கி இருக்கிறது. அவர்களுக்கு எங்கள் அமைப்பு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அறிக்கையில் கூறியிருந்தது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் பி.மோகனன் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், "லவ் ஜிகாத் என்று ஒன்று இல்லவே இல்லை. இது சிறுபான்மையினரை ஒடுக்க சங்கப் பரிவார் பயன்படுத்தி வரும் ஆயுதம். தாமஸ் தனது கருத்து தவறு என்பதை உணர்ந்திருப்பார்" என்று கூறினார்.

மேற்கு ஆசிய நாட்டில் நர்ஸாக பணிபுரியும் ஜோஸ்னா, ஷெஜினை காதலித்து வந்தார். இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி விட்டனர்.

அதேநேரம், ஜோஸ்னா கடத்தப்பட்டுவிட்டதாக உள்ளூர் கத்தோலிக்க சமூகத்தினர் காவல் நிலையத்தை நோக்கி பேரணி சென்றனர். ஜோஸ்னாவின் பெற்றோரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனிடையே, என்னை யாரும் கடத்தவில்லை. நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம் என்று ஜோஸ்னா-ஷெஜின் தம்பதி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டனர்.

பெண் வீட்டார் இருக்கும் பகுதி திருவம்பாடி தொகுதிக்குள் வருகிறது.

இந்தத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்றது.

கடந்த இரண்டு பேரவை தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வென்றது. கிறிஸ்துவ சமூகத்தினரின் ஆதரவுடன் அக்கட்சி வென்றது குறிப்பிடத்தக்கது.

முரண்பாடுகளுக்கு இடையே வலுப்பெறும் இந்தியா- அமெரிக்கா உறவு

இதனிடையே, தாமஸ் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் அல்லது கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கேரள பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்தர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment