Advertisment

ஹத்ராஸ் பெண் தகனம்: தங்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்ததாக பெற்றோர் புகார்

அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 2ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Cremation against our wishes, Hathras victim’s family to Allahabad HC

Manish Sahu

Advertisment

Cremation against our wishes, Hathras victim’s family to Allahabad HC :  ஹத்ராஸ் வழக்கில் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பாலியன் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறும் 19 வயது பெண்ணின் பெற்றோர்கள், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், “எங்கள் பெண்ணின் உடல் தகனம், எங்களின் விருப்பத்திற்கு மாறாக நடத்தப்பட்டது” என்று கூறியுள்ளனர். அப்பெண் நான்கு உயர் சாதி ஆண்களால் இந்த வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் என்று புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் மாவட்ட நிர்வாகம் அவர்களின் வேண்டுகோளுக்கு மாறாக, அப்பெண்ணின் உடலை தகனம் செய்ததாக கூறியுள்ளனர் என்று மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் நரைன் மாத்தூர் கூறியுள்ளார். அவர் இந்த வழக்கில் நீதிமன்ற அறிவுரையாளராக (Amicus Curiae) நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய அறிக்கையில், ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ப்ரவீன் குமார் லக்‌ஷர், நீதிமன்றத்தில், அடுத்த நாள் ஏற்பட இருந்த மிகப் பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அதிகாலையில் அப்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டதாக கூறினார். இதற்கான ஆணையை அவர் லக்னோவில் இருந்து பெறாமல், தன்னிச்சையாக இந்த முடிவை மேற்கொண்டனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

To read this article in english

பி.டி.ஐ செய்திகளின் படி, அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் இந்த வழக்கினை, உ.பியில் இருந்து டெல்லிக்கோ அல்லது மும்பைக்கோ மாற்ற வேண்டும் என்று விரும்புவதாக அப்பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷீமா குஷ்வாஹா கூறியுள்ளார். மேலும் அக்குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்றும், விசாரணை முடிவுகள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் பெற்றோர்கள் மட்டுமின்றி, சகோதரர்கள் மற்றும் அண்ணிகளும் உடன் இருந்தனர். அவர்கள் அனைவரிடம் இருந்தும் அறிக்கைகள் பெறப்பட்டது.

செப்டம்பர் 14ம் தேதி, 19 வயது பெண் தாக்கப்பட்டு நான்கு உயர்சாதி இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் பிறகு அலிகாரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 22ம் தேதி அவருக்கு சுயநினைவு வந்தவுடன் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. பிறகு முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்கொடுமைக்கான பிரிவுகளும் இணைக்கப்பட்டது. பிறகு 4 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். அப்பெண் டெல்லி ஜஃப்தர்ஜங் மருத்துவமனையில் செப்டம்பர் 29ம் தேதி உயிரிழந்தார். அவருடைய உடல் செப்டம்பர் 30ம் தேதி அதிகாலை 3 மணிக்கு முன்பே, உறவினர்கள் யாரும் இல்லாத சூழலில், அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது.

விரைவாக நடத்தப்பட்ட தகனத்தை தொடர்ந்து, தானாக முன் வந்து வழக்கினை விசாரித்தது அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ அமர்வு. அக்டோபர் 12ம் தேதி அனைத்து மாநில மூத்த அதிகாரிகளையும், காவல் துறையினரையும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியது. அந்த அமர்வு, அப்பெண்ணின் உறவினர்களையும் வர உத்தரவு பிறப்பித்தது. அப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமில்லாமல் ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர், உத்தர பிரதேச கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) அவனிஷ் குமார் அவஸ்தி, காவல்துறை இயக்குநர் எச்.சி. அவஸ்தி, கூடுதல் டி.ஜி. (சட்ட ஒழுங்கு) ப்ரசாந்த் குமார் மற்றும் ஹத்ராஸ் எஸ்.பி. வினீத் ஜெய்ஸ்வால் ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.  இந்த வழக்கு டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ரஞ்சன் ராய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 2ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment