கோவா அரசின் சுற்றுலாத் துறை ஒரு தொழில்முனைவோருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்துள்ளது. கோவா சுற்றுலாத் துறை பற்றி எதிர்மறை எண்ணங்களை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து பனாஜியில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய கண்காணிப்பாளரிடம் சுற்றுலாத் துறை துணை இயக்குநர் ராஜேஷ் காலே அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, நவம்பர் 5 அன்று மாலை 3:52 மணியளவில் நடந்த சம்பவம் தொடர்பாக முறைப்படி புகார் அளிக்க இதை எழுதுகிறேன்.
தொழில்முனைவோரும், X பயனருமான ஒருவர் அவரது சமூக ஊடக பக்கத்தில், கோவா பற்றி தவறான தகவல்களைப் பரப்பி, உள்ளூர் வணிகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றார் .
X -ல் சுமார் 22,500 ஃபாலோவர்ஸ்களை கொண்ட அவர் “online legal learning platform” என்ற தளத்தின் நிறுவனராக உள்ளார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.
அவர் வெளியிட்ட X பதிவில், "வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே (கோவா) கைவிட்டுவிட்டனர். 2019 v 2023-ஐ ஒப்பிட்டு பாருங்கள். வருடாந்திரம் இங்கு வருகை தரும் ரஷ்யர்களும் பிரித்தானியரும் அதற்குப் பதிலாக இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் இன்னும் வருகை தருகிறார்கள், ஆனால் வெளிநாடுகளில் இதை விட செலவு குறைந்த பல இடங்கள் உள்ளன. இங்கு சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதால், சுரண்டல் இருப்பதால் பலர் வருவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.
காலே புகாரில், “உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு கோவா நீண்ட காலமாக ஒரு முக்கிய சுற்றுலா தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவது நமது மாநிலத்தின் நற்பெயருக்குக் குந்தகம் விளைவிப்பது மட்டுமின்றி பொதுமக்களின் அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Goa govt files police complaint against social media user who said foreign tourists staying away
இந்த நடவடிக்கைகள் கோவாவின் மாநிலப் புகழைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்தில் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது என்றார்,
கோவாவின் சுற்றுலா உள்கட்டமைப்பு - வண்டிகள் முதல் ஹோட்டல்கள் வரை - சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வந்த நிலையில், சுற்றுலாத் துறை, மாநிலத்தின் பாதுகாப்பிற்காக ஒரு அறிக்கையை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த பதிவும் புகாரும் வந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.