Advertisment

வதந்தியால் முண்டியடித்த பக்தர்கள், நிர்வாகச் செயலிழப்பு: திருப்பதி கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுவே

கூட்ட நெரிசல் "எதேர்சியானது பக்தர்களிடையே ஏற்பட்ட திடீர் பீதி மற்றும் குழப்பம் காரணமாக" நடந்ததாக எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்த சோகம் திட்டமிடுதலில் ஏற்பட்ட மிகப்பெரிய குறைபாடுகள் காரணமாகவும் நடந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tirupa Cm

சதீஷுக்கு, தனது மனைவியின் கடைசி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸின் நினைவு - வைகுண்ட ஏகாதசி டோக்கன்களுக்கான வரிசையில் சேர்ந்துவிட்டதாக ஒரு செல்ஃபியுடன் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு இருந்தது - முடிக்கப்படாத உரையாடல் போல் நீடித்தது. 

Advertisment

திருப்பதியில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 38 வயதான லாவண்யாவும் ஒருவர்.  

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இல்லத்தரசியான லாவண்யா, தனது அண்ணிகளுடன் புனிதமான திருமலை கோயிலுக்குச் சென்று ஆசி பெறுவதற்காக செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். அவரது கணவர், தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரியும் சதீஷ், 11 மற்றும் 13 வயதுடைய இரு பெண் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக வீட்டிலேயே இருந்துள்ளார். 

லாவண்யா புதன்கிழமை, மதியம் வாக்கில் வரிசையில் நின்றுள்ளார். அப்போது அவர் திருப்பதி வரிசையில் நின்றபடி இருவருடன் ஒரு செல்ஃபி எடுத்து அதை வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் பதிவிட்டுள்ளார். 

Advertisment
Advertisement

அன்று மாலை, 8 மணியளவில், லாவண்யா சதீஷுக்கு அவசரமாக போன் செய்துள்ளார். "அவள் குழந்தைகளைப் பற்றி கேட்டு - அவர்கள் சாப்பிட்டார்களா, என்ன செய்கிறார்கள் என " சதீஷ் இடம்  கேட்டுள்ளார். "தொடர்ந்து அங்குள்ள நிலவரம் மற்றும் கூட்டம் பற்றியும் பேசி, பிறகு அழைப்பதாக கூறி போனை வைத்துள்ளார். 

பின்னர் அந்த அழைப்பு வரவே இல்லை. இரவு 11 மணியளவில் சதிஷ்க்கு வந்த அழைப்பில் கூட்ட நெரிசலில் லாவண்யா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

வியாழன் மாலையில், சோகம் நடந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்து சென்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு, லாவண்யா மற்றும் ஐந்து பேர் உயிரிழந்த பத்மாவதி பூங்காவின் முன் வாயில் முற்றிலும் சுத்தப்படுத்தப்பட்டது. நெரிசல் ஏற்பட்ட இடமான இரும்பு கேட்டில் ஒரு டஜன் போலீஸ்காரர்களைத் தவிர, மாலையில் வழக்கமான மக்கள் கூட்டம் திரும்பியது.

மருத்துவ கவனிப்பு தேவைப்பட்ட  ஒரு வயதான பெண்ணை வெளியேற்றுவதற்காக கேட் சிறிது நேரம் திறக்கப்பட்டபோது முதல் முதலில் புதன்கிழமை குழப்பம் வெடித்தது.

சம்பவத்தை நன்கு அறிந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த நேரத்தில் பூங்கா கேட் பகுதியில் 2,000 முதல் 4,000 பேர் வரை இருந்ததாகக் கூறினார். அருகில் உள்ள பள்ளியில் டோக்கன் விநியோகம் தொடங்கியவுடன் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக சீரான முறையில் அனுப்பும் திட்டத்துடன் போலீசார் இருந்தனர்.  கூட்டத்தை அடைத்து வைத்து பூங்கா கேட் பூட்டப்பட்டிருந்தது.

பூங்காவின் பிரதான வாயிலில் இருந்து பள்ளிக்கு செல்லும் வகையில் தடுப்பு பாதை அமைக்கப்பட்டது. வாசலில் ஒரு டஜன் போலீசார் நிறுத்தப்பட்டதாக ஒரு அதிகாரி கூறியபோது, ​​நெரிசல் ஏற்பட்டபோது ஆறு அதிகாரிகள் மட்டுமே இருந்ததாக மற்றொரு அதிகாரி கூறினார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகிய போலீஸ் எஃப்.ஐ.ஆர் படி, இந்த சம்பவம் இரவு 8.20 மணியளவில் நடந்தது. “ஒரு வயதான பெண் மூச்சு விடுவதில் சிரமப்படுவதைக் காவல் துறையினர் கவனித்தனர்... அவர்கள் அவரை கேட் வாயில் வழியாக வெளியே அழைத்துச் செல்லத் தொடங்கினர். ஆனால், இதன்போது டோக்கன் விநியோகம் தொடங்கியதாக பக்தர்கள் மத்தியில் வதந்தி பரவியது.

முதல் நாளிலேயே டோக்கன் பெற்றுவிட என்று பக்தர்கள் முண்டியடித்து வாயில்களை நோக்கிச் சென்றனர். கேட்டை திறந்து, முண்டியடித்து செல்ல முயன்றனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பக்தர்கள் சலசலப்பின் போது கீழே விழுந்தனர். போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற போதிலும், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 

இதில் 40 பேர் காயம் அடைந்தனர், அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில், 5 பேர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர், ” என எப்ஐஆர் கூறுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு, திருப்பதியில் உள்ள விஷ்ணுநிவாசத்தில் ஒரு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த முதல் மரணம், வேறு டோக்கன் விநியோக மையத்தில், இரவு 7.30 மணியளவில் நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த 50 வயதான ஆர்.மல்லிகா இதில் உயிரிழந்தார்.  

டோக்கன் வரிசைக்கு அருகே கூட்ட நெரிசலுக்கு மத்தியில் அவர் சரிந்து விழுந்தார். அவர்கள் ரயிலில் திருப்பதி வந்தடைந்ததாக அவரது கணவர் கிருஷ்ணன் சின்ன கோவிந்தன் தெரிவித்தார். 

“நுழைவுப் புள்ளியிலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் மற்ற பக்தர்களால் சூழ்ந்திருந்னர். அவள் எழுந்து நிற்க முயன்றாள், ஆனால் திடீரென கூட்டம் முண்டியடித்து தள்ளியை அடுத்து அவர் கீழே விழுந்தார். நான் அவளை ஒதுக்கி இழுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்தேன், ஆனால் டிரைவர் ஆம்புலன்ஸை அழைக்க பரிந்துரைத்தார். 

நாங்கள் ரூயா மருத்துவமனையை அடைந்தபோது, ​​அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். அவளுக்கு சுகர்  மற்றும் பிற உடல்நல பாதிப்பு இருந்தது,” என்று அவரது கணவர் கோவிந்தன் கூறினார். 

ஆங்கிலத்தில் படிக்க:   How a mix of crowd management failure, a rumour and eager devotees led to fatal Tirupati stampede

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment