/tamil-ie/media/media_files/uploads/2023/01/NIA-4.jpg)
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள் பகிர்வு: சி.ஆர்.பி.எஃப் உதவி ஆய்வாளர் கைது - என்.ஐ.ஏ அதிரடி
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்ததாகக் கூறி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) தெரிவித்துள்ளது.
CRPF உதவி சப்-இன்ஸ்பெக்டரை டெல்லியில் கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதால், அவர் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் மத்திய ஏஜென்சி கூறியுள்ளது. பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தால், அவர் ஜூன் 6 வரை என்.ஐ.ஏ. காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
"மோதி ராம் ஜாட் என்று அடையாளம் காணப்பட்ட CRPF வீரரை கைது செய்துள்ளோம். அவர் 2023 முதல் பாக்., உளவுத்துறை அதிகாரிகளுடன் (PIOs) தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டு, உளவு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். PIOs-ல் இருந்து பல்வேறு வழிகள் மூலம் நிதி பெற்றுக்கொண்டதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்று NIA செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
CRPF செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மத்திய ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைந்து மோதி ராம் ஜாட்டின் சமூக ஊடக நடவடிக்கையை "தொடர்ந்து கண்காணித்தபோது", அவர் விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை மீறியதைக் கண்டறிந்ததாகத் தெரிவித்தார்.
"முதற்கட்ட விசாரணையில், இந்த விவகாரம் தீவிரமானதாக கருதப்பட்டதுடன், உயர் விசாரணைக்காக தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) அனுப்பப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளையும், CRPF விதிகளையும் இணைத்து, மே 21-ம் தேதி முதல் மோதி ராம்ஜாட் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்" என்று அதிகாரி தெரிவித்தார்.
தொடர் கைது நடவடிக்கை:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து இந்தியாவில் இருந்து கொண்டு தேசவிரோத செயல்களில் ஈடுபடும் நபா்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக சந்தேகிக்கப்படும் பல்வேறு நபா்களின் சமூகவலைதள தொடா்புகள் தொடங்கி மின்னஞ்சல், இணையவழி, கைப்பேசி தொடா்புகள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. முக்கியமாக பாகிஸ்தானுக்கு சென்று வந்த நபா்கள், வெளிநாடுகளுக்கு பயணித்து பாகிஸ்தான் தொடா்புடையவா்களைச் சந்தித்தவா்கள் என பலரும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஹரியாணா பெண் யூடியூபா் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 4 உளவாளிகள் அண்மையில் கைது செய்யப்பட்டாா். மின்தடையின்போதுகூட, ஆபரேஷன் சிந்தூர் தகவல்களை உளவு அமைப்புகளுக்குக் கொடுத்ததாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர். பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.