கடந்த மாதம் செப்டம்பர் மாதம் 27- ம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் 'மனித உரிமைகளின் சித்தாந்தங்களின் மூலம் நாட்டின் பயங்கரவாதம் மற்றும் போர்க்குணத்தை திறம்பட கையாள முடியும்' என்ற தலைப்பில் விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட குஸ்பூ சவுகான் என்கிற சிஆர்பிஎஃப் பெண் கான்ஸ்டபிள் பேசிய பேச்சு நாட்டின் மணி உரிமைகளை குழிதோண்டி புதைப்பதாகவே உள்ளது. செப்டம்பர் 27- ம் இந்த விவாதம் நடைபெற்றிருந்தாலும் இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் விவாதிக்கும் போது, "அப்சல் குரு (2001 நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி) போன்றவர்களைப் பெற்றெடுத்த கர்ப்பப்பையையும் அழிக்க வேண்டும், ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் இதயத்தை முக்கோண இந்தியக் கோடி மூலமாக துளைக்க வேண்டும்" என்ற பகிரங்கமாக தெரிவித்தார் .
சிலர் இந்த பேச்சை பாராட்டியிருந்தாலும், பலர் சிஆர்பிஎஃப் போன்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட படையில் மனித உரிமைகளை புறக்கணிக்கப் படுகிறதா? என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளனர் .
இந்நிலையில், சிஆர்பிஎஃப் இதுகுறித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
"ஆணையம் ஏற்பாடு செய்த ஒரு விவாதத்தில் தலைப்புக்கு எதிராக பேசியிருக்கிறார். அதில் தவறில்லை. பேச்சில் உள்ள சில பகுதிகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் . சிஆர்பிஎஃப் பில் நாங்கள் மனித உரிமைகளை நிபந்தனையின்றி மதிக்கின்றோம், ”என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.
சவுகான் அந்த விவாதத்தில் தனது பேச்சுக்கு ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .என்.எச்.ஆர்.சி பொதுச்செயலாளர் ஜெய்தீப் கோவிந்தா இந்த விவாதத்ற்க்கு தலைமை தாங்கினார். மற்ற நடுவர்களாக சுனில் கிருஷ்ணா, முன்னாள் டி.ஜி (விசாரணை), தேசிய சட்ட பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஜி எஸ் வாஜ்பாய் பங்கேற்று இருந்தனர்.