scorecardresearch

ரயில் பயணியை காப்பாற்றிய வீரர் -துரிதமாக செயல்பட்ட சிஆர்பிஎப் வீரருக்கு குவியும் பாராட்டுகள்

CRPF man saves life : ரயில் வந்துகொண்டிருந்த நிலையில், தண்டவாளத்தை கடக்க முற்பட்டவரை, நொடிப்பொழுதில் செயல்பட்டு சிஆர்பிஎப் காப்பாற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது

maharashtra, mumbai, thane, crpf personnel, passenger, constable, thane railway station, save, life, netizens, viral, video
maharashtra, mumbai, thane, crpf personnel, passenger, constable, thane railway station, save, life, netizens, viral, video, மகாராஷ்டிரா, மும்பை, தானே, சிஆர்பிஎப் வீரர், பயணி, உயிர், நெட்டிசன்கள், பாராட்டு, வீடியோ, வைரல்

ரயில் வந்துகொண்டிருந்த நிலையில், தண்டவாளத்தை கடக்க முற்பட்டவரை, நொடிப்பொழுதில் செயல்பட்டு சிஆர்பிஎப் காப்பாற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே ரயில்வே ஸ்டேசனில் சிஆர்பிஎப் வீரர் அனில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பயணி ஒருவர், ரயில் தண்டவாளத்தை படிக்கட்டுகளை பயன்படுத்தி கடக்காமல், தண்டவாளத்தின் குறுக்கே நடந்து கடந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், வேகமாக அந்த பாதையை கடந்து செல்ல விரைந்து வந்து கொண்டிருந்தது.

இதையறியாத ரயில் பயணி, மெதுவாக ரயில் தண்டவாளத்தை கடந்துகொண்டிருந்தார். இதை கவனித்த சிஆர்பிஎப் வீரர் அனில், துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை, நடைமேடையில் ஏற்றிவிட்டார். ரயில் அவர்களை நெருங்கவே, சமயோசிதமாக சிந்தித்து, மற்றொரு தண்டவாளத்தில் தாவினார். இதன்மூலம், இருவரது உயிர்களும் காப்பாற்றப்பட்டன. இந்த சிசிடிவி விடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமயோசிதமாகவும் அதேசமயம் துரிதமாகவும் செயல்பட்டு ரயில் பயணியின் உயிரை காப்பாற்றிய சிஆர்பிஎப் வீரருக்கு நெட்டிசன்கள், சமூகவலைதளங்களில் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Crpf man saves life of passenger in thane railway station