CRPF's madadgaar helpline helped JK man who cycles home from Mumbai to meet his ailing father
இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ரஜ்ஜௌரியில், எல்.ஒ.சிக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள கிராமம் தான் பஞ்கிரான். அங்கே பிறந்து வளர்ந்து, மும்பையில் வாட்ச்மெனாக பணி செய்து வருபவர் ஆரிஃப்.
Advertisment
ஆரிஃபின் தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்ட காரணத்தால் அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. பொது போக்குவரத்து வசதிகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ள காரணத்தால் அவர் தன்னுடைய சைக்கிள் பயணத்தை துவங்கினார்.
2500 கிலோ மீட்டர் என்பது மிகப் நீண்ட தூரம். ஆனால் தன்னுடைய தந்தையை காண்பதற்காக சென்ற இவரை குஜராத்தின் வடோதரா பகுதியில் இருக்கும் ஆயுதப் படை வீரர்கள் கவனித்தனர். இந்த இக்கட்டான சூழலில் அவருக்கு தேவையான உதவிகள் வழங்க ஆயுதப்படை வீரர்கள் முடிவு செய்தனர். அதனால் ஆரிஃபை அங்கிருந்து ஜோத்பூர் வரை அழைத்து சென்றனர். அங்கிருக்கும் ரேபிட் ஆக்சன் போர்ஸ் அவரை ஜம்மு-காஷ்மீருக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் சென்றனர்.
Advertisment
Advertisements
Arifs Father has been airlifted to GMC Jammu by @crpfindia@JKZONECRPF for better treatment.
102 Bn @RAFCRPF near Vadodara Gujarat provided Arif with food assistance and other items along with sanitizers, masks etc . 2/3 pic.twitter.com/p44rHWZNpf
அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சிஆர்பிஎப் வீரர்கள் பஞ்கிரானில் இருந்த ஆரிஃபின் தந்தையை அரசு மருத்துவமனைக்கு விமானம் மூலமாக அழைத்துச் சென்றனர். அவருக்கு அங்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் சண்டிகரில் இருக்கும் பி.ஜி.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது ஆரிஃப் தன் தந்தையுடன் ஹெலிகாப்டர் மூலமாக ஜம்முவில் இருந்து சண்டிகருக்கு பறந்து கொண்டிருக்கிறார்.
தந்தை - மகன் பாசப் போரட்டத்தினை உணர்ந்து ஒருவரின் உயிரைக் காக்க இந்திய துணை ராணுவப்படையின் எடுத்துக் கொண்ட முயற்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
CRPF's madadgaar உதவி மையம் என்பது ஆபத்து காலங்களில் காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உருவாக்கப்பட்டது. காஷ்மீர் மக்களுக்காக ஜூன் மாதம் 2017ம் ஆண்டில் இருந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.