நிஜத்தில் ஒரு ராட்சசன்... 3 வயது குழந்தை வாயில் வெடி வைத்த கொடூரன்

வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை வாயில் பட்டாசு வைத்து வெடிக்கச் செய்த கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்திம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ளது மிலாக் கிராமத்தில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில், சசிகுமார் என்பவரின் 3 வயது பெண் குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தாள்.

அப்போது அங்கிருந்த ஹர்பால் என்ற இளைஞன் குழந்தையின் வாயில் திடீரென வெடியை வைத்தான். பட்டாசை வாயில் வைத்தது மட்டுமில்லாமல் உடனே அதை பற்ற வைத்தான். சில நொடிகளிலேயே அக்குழந்தையின் வாயில் அப்பாட்டாசு வெடித்து சிதறியது.

3 வயது குழந்தை வாயில் வெடித்த பட்டாசு… கொடூரன் தலைமறைவு

பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்த நிலையில், குழந்தை வாய் பலத்த காயமடைந்தது. முகத்திலும் காயங்கள் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அழும் குழந்தையின் சத்தத்தை கேட்டு பதறியடித்து ஓடி வந்த பெற்றோர் நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அக்குழந்தைக்கு 50 தையல்கள் போடப்பட்டது. மேலும், தொண்டையில் நோய்த்தொற்று பரவியுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை வைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் வாயில் வெடி வைத்த கொடூரன் தற்போது தலைமறைவாகியுள்ளான். அவனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close