Advertisment

காங்கிரஸிற்கு ஆதரவாக களத்தில் குதித்த தி.மு.க; சமூக வலைதளத்தில், “அழும் பிரதமர், கமிஷன் முதல்வர்” ட்ரெண்டிங்

காங்கிரஸின் “அழும் பிரதமர், கமிஷன் முதல்வர்” ட்ரெண்டிங் குறித்து பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “பிரதமர் அழவில்லை, காங்கிரஸ்தான் அழுதுக் கொண்டிருக்கிறது” எனப் பதிலளித்தார்.

author-image
WebDesk
New Update
CryPMPayCM Congress new slogan in Karnataka after Priyankas retort to Modis 91 abuses remarks

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “பிரதமர் நரேந்திர மோடிதான் மக்கள் முன் "அழும்" முதல் பிரதமர் என்று பேசிய நிலையில் காங்கிரஸார் "CryPMPayCm" என்ற ஹேஷ்டேக்கை சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

Advertisment

முன்னதாக, கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி, உங்கள் முன் வந்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறி அழும் அத்தகைய பிரதமரை நான் முதல்முறையாகப் பார்க்கிறேன்.

உங்கள் குறைகளைக் கேட்பதற்குப் பதிலாக, அவர் தனது துயரங்களைக் கூறுகிறார். பிரதமர் மோடியின் அலுவலகத்தில் யாரோ ஒரு பட்டியலை தொகுத்துள்ளனர்,

அதில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இல்லை. அந்த பட்டியல் மோடியை எத்தனை முறை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பது பற்றியது.

குறைந்தபட்சம் பட்டியல் ஒரு பக்கத்திற்கு பொருந்தும். என் குடும்பத்தினர் மீது அவர்கள் (பாஜக தலைவர்கள்) வீசிய அவதூறுகளைப் பார்த்தால், நாங்கள் பட்டியல்களை உருவாக்கத் தொடங்கினால், புத்தகத்திற்குப் புத்தகம் அச்சிட வேண்டியிருக்கும்” என்றார்.

பிரியங்கா காந்தியின் பேச்சைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் பிரதமரை தாக்கத் தொடங்கினர். தற்போதைய கர்நாடக அரசாங்கத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் முந்தைய பிரச்சாரத்தையும் தலைவர்கள் முன்னெடுத்தனர்.

2022 செப்டம்பரில், பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசாங்கம் அரசாங்க ஒப்பந்தங்களில் இருந்து 40% கமிசனைப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, பெங்களூரு முழுவதும் QR குறியீடுகள் மற்றும் "PayCM" தலைப்புகளுடன் போஸ்டர்கள் வெளிவந்தன.

இதற்கிடையில், காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பிரியங்காவின் உரையின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “#CryPMPayCM #கர்நாடகா மக்கள் சொல்வதைக் கேட்கத் தொடங்க வேண்டும்! இது ஒன்றே ராஜ தர்மம்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “கர்நாடக மக்கள் 40% கமிஷன் அரசை தோற்கடித்து, 100% அர்ப்பணிப்புள்ள அரசை காங்கிரஸின் கீழ் தேர்ந்தெடுப்பார்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இதில் திமுகவும் இணைந்தது, பிரியங்காவின் இந்த கருத்து பாஜகவுக்கு தலைவலியாக மாறியுள்ளது என்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர், ““பிரதமர் அழும் நேரமெல்லாம், 91 முறை அவமானப்படுத்தப்பட்டதாக அழுகிறார், எத்தனை முறை நம் குடும்பம் அவமதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால், ஒரு புத்தகம் எழுத வேண்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “பிரதமர் ஒருபோதும் அழுததில்லை. கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரஸ் தான் அழுது கொண்டிருக்கிறது. மக்களுக்கும் அவர்கள் மீது அனுதாபம் இல்லை” என்று பதில் அளித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Congress Priyanka Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment