Advertisment

தமிழகத்தில் பரவும் கொரோனா வைரசின் மரபணு அமைப்பில் தனித்துவ பண்பு உள்ளது- சிஎஸ்ஐஆர்

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரசின் மரபணு அமைப்பில் (சார்ஸ்- கோவ்-2) தனித்துவ பண்பை இந்திய ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் பரவும் கொரோனா வைரசின் மரபணு அமைப்பில் தனித்துவ பண்பு  உள்ளது- சிஎஸ்ஐஆர்

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரசின் மரபணு அமைப்பில் (சார்ஸ்- கோவ்-2) தனித்துவ பண்பை இந்திய ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். மேலும், இந்த குறிப்பிட்ட மரபணு பண்பு கொரோனா வைரசை பலவீனப்படுத்ததும் வகையில் அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தர்.

Advertisment

இந்த குறிப்பிட்ட மரபணு வேறுபாடு பண்பிற்கு ‘Clade I/A3i’ பரம்பரை என பெயரிடப்பட்டுள்ளது. சார்ஸ் -கோவ்-2 RNA மரபணுவின் வரிசைமுறையைக் கண்டறிவதற்காக இந்திய நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் , 41 சதவீத பேரின் மரபனுவில் இந்த Clade I/A3i பரம்பரை கண்டறியப்பட்டது.

உலகளவில் செய்யப்பட்ட அனைத்து மரபணுவின் வரிசைமுறைக் கண்டறியும் ஆய்வில், 3.5 சதவீதம் பேருக்கு  மட்டுமே இந்த மரபணு வேறுபாடு காணப்படுகிறது.

இந்தியாவில் சார்ஸ்- கோவ்- 2 வைரசின் மரபணு பகுப்பாய் குறித்த ஆய்வுக் கட்டுரையை, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (Centre for Cellular and Molecular Biology,CCMB) செய்யப்பட்ட இணைப்பை கடந்த திங்களன்று ட்விட்டரில்  வெளியிட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி பெருந்தொற்று பரவத் தொடங்கிய காலத்தில், Clade A3i பரம்பரையை கொரோனா வைரஸ் வைரஸ் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பாட்ட 64 பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மூலம்  வைரசினுடைய மரபணு வரிசையை  ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். முடிவில், தமிழகம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, டெல்லியில் பரவி வரும் சார்ஸ்- கோவ்-2 வைரஸ் இந்த பரம்பரையோடு இணைக்கப்படுவாதாக  கண்டறியப்பட்டது.

இந்தியாவில் மூன்று முக்கிய சார்ஸ்-கோவ் -2 வைரஸ்   வகைகள் உள்ளதாகவும், வைரஸ் மரபணுவின் முக்கியமான பகுதிகளில் மிகக் குறைந்த அளவிலான பிறழ்வுகள்  காணப்படுவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்து வந்தது. வுஹான், அமெரிக்கா , ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து வந்த விமானப் பயணிகள் மூலமாக மூன்று வகையான வைரசுகள்  இந்தியாவில் பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது .

"மரபணுக்களின் குறைந்த வேறுபாட்டிற்கு சான்றாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் (கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவிய காலம்) கொரோனா வைரசின் பொதுவான மூதாதையர் தோன்றியிருக்கலாம் என்று தொற்றுநோயியல் மதிப்பீடுகள் தெரிவிப்பதாக தற்போதைய  ஆய்வுக் கட்டுரையில் கூறப்படுகிறது.

இந்தியாவில் இதுநாள் வரையில் சார்ஸ்-கோவ் -2 வைரசின் பரம்பரையை வகைப்படுத்தும் முதல் விரிவான ஆய்வுக்கட்டுரை இது தான் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வின் முக்கியத்தும் குறித்து ஆய்வுக் கட்டுரையின்  ஆசிரியர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறுகையில், “ இந்தியாவில் ஆரம்ப காலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக பரவியதற்கு முக்கிய காரணமாக   'Clade I/A3i' பரம்பரையை சேர்ந்த கொரோனா வைரஸ் இருக்கலாம். அதன் மரபணு வரிசையில் உள்ள நான்கு வேறுபாடுகளின் அடிப்படையில் மற்ற மரபணு அமைப்பு கொண்ட கொரோனா வைரசை நாம் அடையாளம் காணலாம் " என்று தெரிவித்தார்.

“இந்த நான்கு வேறுபாடுகளின் தன்மை என்ன என்பதை தற்போது உறுதியாக கூற முடியாவிட்டாலும், காணப்படும் வேறுபாடுகளில் ஒன்று தான் கொரோனா வைரசை  பலவீனமாக்கியுள்ளது. இந்தியாவில் பரவலாக இருக்கும் மற்ற பரம்பரை கொரோனா வைரசை (A2a) ஒப்பிடும்போது  Clade I/A3i’ பரம்பரை வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸில் பிறழ்வு பெதுவாக நடக்கிறது. இந்த தன்மை பெரும்பாலும் வைரஸுக்கு பாதகமானதாக அமைகிறது. எந்த மரபணு தன்மை கொண்ட வைரஸ்  மேலோங்கும், எது பலவீனமடையும் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும் ” என்று தெரிவித்தார்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment