Varinder Bhatia, Manraj Grewal Sharma
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாப் போதைப்பொருள் கைதுகள் பற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸின் விசாரணை ஒரு திடுக்கிடும் வடிவத்தை வெளிப்படுத்தியது: போதைப்பொருள் மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருள்கள் (NDPS) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.,களில் கிட்டத்தட்ட பாதி நகலெடுக்கப்பட்ட எஃப்.ஐ.ஆர்.,களாக உள்ளன. அதாவது அனைத்து எஃப்.ஐ.ஆர்.,களும் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது போல் உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Ctrl C, Ctrl V: How FIRs in drugs cases across Punjab have the same language
ஏப்ரல் 1, 2022 முதல் பிப்ரவரி 28, 2023 வரை NDPS சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 11,156 எஃப்.ஐ.ஆர்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்தது, அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன. இந்தக் காலக்கட்டத்தில் மாநில காவல்துறை அவர்களின் போதைப்பொருள் எதிர்ப்பு முயற்சிகளின் அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பித்தது,
மிகவும் பரிச்சயமான ஒரு ஸ்கிரிப்ட்: "பைடே புருஷ்" ("கெட்ட மனிதர்கள்") தேடும் போலீஸ்காரர்களின் வழக்கமான ரோந்து பணியின் போது, சந்தேகத்திற்கிடமான நபர்கள் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் வைத்திருக்கும் பாலித்தீன் பைகளை வேகமாக அப்புறப்படுத்த முயற்சித்தனர். சந்தேக நபரின் கையில் "மோமி லிஃபாஃபா" (பாலித்தீன்) இருப்பதுடன் கையும் களவுமாக பிடித்தாலும், வழிப்போக்கர்கள் தங்கள் "மஜ்பூரி" (நிர்பந்தம்) காரணமாக பறிமுதல் செய்யப்பட்டதற்கு சாட்சியாக மாற மறுக்கின்றனர், அல்லது முறையான அரசு அதிகாரி அல்லது டூட்டி மாஜிஸ்திரேட் முன்னிலையில் இல்லாமல் போலீஸ்காரர்கள் அவர்களை சோதனை செய்ய சட்டம் இருப்பதாக கூறினாலும், போலீஸாரே அவர்களை சோதனையிட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனுமதிக்கின்றனர்: பாதிக்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர்.கள் உரிய செயல்முறையை விட காப்பி அண்ட் பேஸ்ட் செய்யப்பட்ட நடைமுறையைக் காட்டுகின்றன.
இந்த சுயாதீன சாட்சிகள் இல்லாதது மற்றும் சந்தேகத்திற்குரியவர்கள் போலீஸாரின் தேடுதலுக்கு ஒத்துக் கொள்வதற்கான வியப்பூட்டும் ஆர்வமும் செயல்முறையிலேயே கேள்விக்குறிகளை ஏற்படுத்தியது. பிரிவு 50 NDPS சட்டம் 1985ன் படி, ஒரு டூட்டி மாஜிஸ்திரேட் அல்லது அரசு அதிகாரி முன்னிலையில் ஒரு சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான விருப்பம் குற்றம் சாட்டப்பட்ட பிறகு இந்த "தன்னார்வ" தேடல்கள் அடிக்கடி நிகழும் என்று பதிவுகள் காட்டுகின்றன.
போதைப்பொருள் உட்கொள்ளும் போது தனிநபர்கள் பிடிபடும் நிகழ்வுகளிலும் ஸ்கிரிப்ட் ஒரே மாதிரியாக உள்ளன. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பொதுவாக புதர்களுக்குப் பின்னால் அல்லது சுவர்களுக்கு அருகில், வாகனங்களில், பெரும்பாலும் வெள்ளித் தகடு, பொருளை உள்ளிழுக்கப் பயன்படுத்தப்படும் ரூ. 10 நோட்டுகள், பாதி எரிந்த தீப்பெட்டிகள் அல்லது லைட்டர்களுடன் ஹெராயின் போதைப்பொருளை இழுக்கும் கருவி ஆகியவை கண்டறியப்படுகின்றன.
பஞ்சாப்பில் உள்ள 10 மாவட்டங்களில் இருந்து இந்த விளக்கமான 10 உதாரணங்களைக் கவனியுங்கள்:
○ எஃப்.ஐ.ஆர் எண். 87, அமிர்தசரஸ் மாவட்ட காவல் ஆணையரகம், கான்ட் காவல் நிலையம் (04/04/2022)
"கெட்ட மனிதர்களை" தேடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர்கள், எதிர் திசையில் இருந்து வந்த ஸ்விஃப்ட் டிசையர் காரைக் கண்டனர். போலீஸாரைப் பார்த்ததும், தனது காரை நிறுத்தி, தனது கால்சட்டையின் வலது பாக்கெட்டிலிருந்து ஒரு பாலித்தீன் பையை எடுத்து தூக்கி எறிய முயன்றார் இளம் டிரைவர். அவர் பிடிபட்டார். சாட்சியாக வருமாறு அருகில் இருந்தவர்களை போலீசார் கேட்டனர், ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.
○ FIR எண். 127, லூதியானா, திப்பா காவல் நிலையம் (21/06/2022)
"கெட்ட மனிதர்களைத்" தேடி ஒரு போலீஸ் குழு தனியார் வாகனத்தில் ரோந்து சென்று கொண்டிருந்தது. அவர்களை பார்த்ததும், பூங்காவில் அமர்ந்திருந்த ஒருவர், தான் வைத்திருந்த பாலிதீன் பையை தூக்கி எறிய முயன்றார். ஒரு மாஜிஸ்திரேட் அல்லது அரசு அதிகாரி முன்னிலையில் அவரை சோதனை செய்வோம் என்று கூறப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார், ஆனால் அவர் காவல்துறையினரை சோதனை செய்ய அனுமதிக்க முன்வந்தார். பாலித்தீன் பையில் 5 கிராம் ஹெராயின் போதைப் பொருளை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
○ எஃப்.ஐ.ஆர் எண். 19, மான்சா, பிகி காவல் நிலையம் (02/02/2023)
இரவில் "சந்தேகத்திற்குரிய (சுக்கி) ஆண்களை" தேடி ஒரு போலீஸ் குழு ரோந்து சென்றது. அப்போது, ஒரு பெண் தனது வலது கையில் பாலித்தீன் பையுடன் போலீசாரை நோக்கி நடந்து வந்தார். போலீஸைப் பார்த்ததும் அவள் திரும்பி நடந்தாள். அவள் பிடிபட்டாள். பொதுமக்களிடமிருந்து சாட்சியைப் பெறுவதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை… அவள் தன்னை சோதனையிடுவதற்கு காவல்துறையை அனுமதிக்க முன்வந்தாள். பாலித்தீன் பையில் ஏழு கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
○ FIR எண். 155, ஃபெரோஸ்பூர், லகோ கே பெஹ்ராம் காவல் நிலையம் (27/12/2022)
"கெட்ட மனிதர்களை" தேடி ஒரு போலீஸ் குழு மடிக்கணினி மற்றும் பிரிண்டருடன் தனியார் வாகனத்தில் ரோந்து சென்றுக் கொண்டிருந்தது. போலீஸாரைப் பார்த்ததும், நடந்து சென்றுக் கொண்டிருந்த ஒருவர் திரும்பி, தனது கால்சட்டையின் வலது பாக்கெட்டில் இருந்து பாலித்தீன் பையை எடுத்து தூக்கி எறிய முயன்றார். அவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டார். காவல்துறையினர் தன்னை சோதனையிட அனுமதித்தார். பொதுமக்களிடமிருந்து சாட்சியைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. பாலித்தீன் பையில் 22 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
○ FIR எண். 0463, கபுர்தலா, கோட்வாலி காவல் நிலையம் (26/12/2022)
கெட்ட மனிதர்களைத் தேடி காவல்துறையினர் ரோந்து சென்றுக் கொண்டிருந்தபோது, பீலா மோர் அருகே சால்வையால் போர்த்திக் கொண்டு நின்ற பெண்ணை காவல் துறையினர் கண்டதாக எஃப்.ஐ.ஆர் கூறுகிறது. போலீஸாரைப் பார்த்ததும், அவள் நழுவ முயன்றாள், ஆனால் காவல் துறையினர் அவளை மடக்கி பிடித்தனர் மற்றும் அருகிலுள்ள புல்லில் "வஜந்தர் கலா மோமி லிஃபாஃபா" (ஒரு கனமான கருப்பு பிளாஸ்டிக் பை) இருப்பதைக் கண்டனர். அவர்கள் வழிப்போக்கர்களை சாட்சிகளாகப் பெற முயன்றனர், ஆனால் மக்கள் தங்கள் "பயத்தை" மேற்கோள் காட்டி முன் வரவில்லை. எனவே பையை திறந்து பார்த்ததில் 600 எடிசோலம் மாத்திரைகள் இருந்தது. அந்தப் பெண்ணால் எந்த பில்களையும் சமர்ப்பிக்க முடியவில்லை மற்றும் NDPS சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
○ எஃப்.ஐ.ஆர் எண். 0097, முக்த்சர் சாஹிப் காவல் நிலையம் (29/06/2022)
சந்தேகத்திற்கிடமான ஆண்களைத் தேடி காவல் துறையினர் ரோந்து சென்று கொண்டிருந்தபோது, கபர்வாலா கிராமத்திலிருந்து சரவா போட்லாவுக்குச் செல்லும் வழியில், போட்லா பாலத்தில் இரண்டு பெண்கள் தங்கள் வலது கைகளில் வெளிப்படையான லிஃபாஃபாக்களில் இருந்து எதையோ எடுத்துக்கொண்டனர். போலீஸ் ஸ்கார்பியோவின் விளக்குகளைப் பார்த்ததும், அவர்கள் பாலிதீன்களை எறிந்துவிட்டு, வலதுபுறம் இறங்கி செல்ல முயன்றனர், ஆனால் அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் தரையில் கிடந்த வெளிப்படையான பாக்கெட்டுகள் மூலம் "நஷீலி கோலியானை" பார்த்தனர். எந்த ஒரு தனி நபரும் சாட்சியாக வர சம்மதிக்கவில்லை. அரசு அதிகாரி அல்லது டூட்டி மாஜிஸ்திரேட் முன்னிலையில் பாலித்தீன் பையை சோதனையை செய்வதற்கு பெண்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறப்பட்டது, ஆனால் அவர்கள் தங்கள் மீது முழு “யாகீன்” (நம்பிக்கை) இருப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். போலீசார் சோதனை செய்ததில், 22 பேக் டிராமடோல் மாத்திரைகள் கிடைத்தது.
○ FIR எண். 0152, குர்தாஸ்பூர் காவல் நிலையம் (04/12/2022)
ஒரு போலீஸ் குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, "கெட்ட மனிதர்களைத்" தேடிக்கொண்டிருந்தபோது, வலது கையில் ஒரு கருப்பு பாலிதீனுடன் ஒரு பெண்ணைக் கண்டார்கள். போலீஸ்காரர்களைப் பார்த்ததும் திரும்பிச் செல்ல முயன்று பாலீத்தின் பையை பக்கவாட்டில் எறிந்தாள். போலீசார் அவளை மடக்கி, பின்னர் தங்கள் உள்ளூர் ஏ.எஸ்.ஐ.,க்கு தகவல் கொடுத்தனர். அவர் அந்த இடத்திற்கு வந்து, அரசு அதிகாரி அல்லது டூட்டி மாஜிஸ்திரேட் முன்னிலையில் பாலித்தீன் சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு அவருக்கு உரிமை உண்டு என்று அந்தப் பெண்ணிடம் கூறினார், ஆனால் அவர் போலீசாரிடம் "விசுவாசம்" (நம்பிக்கை) வெளிப்படுத்தினார், பின்னர் அவர்கள் 1,010 வெள்ளை மாத்திரைகளை எடுத்தனர். பொதுமக்கள் யாரும் சாட்சியாக இருக்க ஒப்புக்கொள்ளவில்லை.
○ FIR எண். 0084, சப்பேவால், ஹோஷியார்பூர் காவல் நிலையம் (23/07/2022)
முகோபட்டியில் ஒரு போலீஸ் குழு தடுப்புகள் அமைத்திருந்த போது, அதிவேகமாக வந்த ஆல்ட்டோவைக் கண்டனர். டார்ச்லைட் மூலம் அதை நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்த இருவர், ஒரு ஆண் மற்றும் மற்றொரு பெண் தப்பி ஓட முயன்றனர். அவர்கள் அரசு அதிகாரி அல்லது டூட்டி மாஜிஸ்திரேட் முன்னிலையில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர். எந்த வழிப்போக்கரும் சாட்சியாக மாற ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பேரில் போலீசார் காரை சோதனையிட்டதில் 45 கிராம் ஹெராயின் மற்றும் போதைப்பொருள் பணம் ரூ.11,550 கிடைத்தது.
○ எஃப்.ஐ.ஆர் எண். 131, ஜலந்தர் ரூரல், பில்லூர் காவல் நிலையம் (30/05/2022)
"கெட்ட மனிதர்களை" தேடி ஒரு தனி வாகனத்தில் லேப்டாப் மற்றும் பிரிண்டருடன் ஒரு போலீஸ் குழு ரோந்து சென்றுக் கொண்டிருந்தது. ஒரு பெண் இடது கையில் பாலித்தீன் பையை வைத்துக்கொண்டு நடந்து செல்வது தெரிந்தது. போலீசாரை பார்த்ததும், பாலிதீன் பையை தூக்கி எறிந்தார். அவள் பிடிபட்டு விசாரிக்கப்பட்டாள். ஒரு மாஜிஸ்திரேட் அல்லது அரசு அதிகாரி முன்னிலையில் அவள் தன்னை சோதனையிடக் கூறலாம் என்று கூறப்பட்டது. ஆனால் காவல் துறையினர் தன்னைப் பரிசோதிக்க அவள் முன்வந்தாள். பொதுமக்களிடமிருந்து சாட்சியைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. பாலித்தீன் பையில் இருந்து 5 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
○ FIR எண். 108, தர்ன் தரன், பிகிவிண்ட் காவல் நிலையம் (02/10/2022)
ஒரு போலீஸ் குழு "கெட்ட மனிதர்களை" தேடி ரோந்து கொண்டிருந்தது. போலீஸாரைப் பார்த்ததும், நடந்து சென்ற ஒருவர் தனது கால்சட்டையின் வலது பாக்கெட்டில் இருந்து பாலித்தீன் பையை எடுத்து தூக்கி எறிய முயன்றார். அவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டார். ஒரு மாஜிஸ்திரேட் அல்லது அரசு அதிகாரி முன்னிலையில் சோதனை நடத்தலாம் என்று கூறப்பட்டாலும், காவல்துறையினர் தன்னை சோதனையிட அவர் முன்வந்தார். பொதுமக்களிடமிருந்து சாட்சியைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. பாலித்தீன் பையில் இருந்து 7 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கைகள்
இந்த NDPS வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட வல்லுநர்கள், காவல்துறை நடவடிக்கைகளில் "பெரிய முரண்பாடுகள்" என்று முத்திரை குத்தி, மீண்டும் மீண்டும் வரும் இந்த நடைமுறைகள் குறித்து அடிக்கடி கவலைகளை எழுப்பியுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் என்.டி.பி.எஸ் வழக்குகளை எடுத்து வரும் வழக்கறிஞர் விவேக் தாக்கூர், “இதுபோன்ற எஃப்.ஐ.ஆர்.,களைப் பதிவு செய்யும் போது இந்த மெக்கானிக்கல் ஸ்கிரிப்டைப் பயன்படுத்துவதும், என்.டி.பி.எஸ் சட்டத்தின் கட்டாய விதிகளைப் புறக்கணிப்பதும் இந்த வழக்குகளில் பல வீழ்ச்சிக்கு ஒரு காரணம்,” என்று கூறினார்.
2021 ஆம் ஆண்டு NDPS வழக்கில் இதேபோன்ற அவதானிப்பை மேற்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் சங்வான், “பல வழக்குகளில் புலனாய்வு அதிகாரிகள், NDPS சட்டத்தின் கீழ் விசாரணையை நடத்தும்போது, இதில் உள்ள கட்டாய விதிகளை கடைபிடிக்காமல் இருப்பது கவனிக்கப்படுகிறது. '' குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் கட்டமைக்கப்பட்டதாகவும், நிரபராதியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
இருப்பினும், சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையில், பஞ்சாப் காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி கௌரவ் யாதவ், மாநிலத்தில் தண்டனை விகிதம் 80 சதவீதம் என்று கூறினார். ஆனால் நவம்பர் 2 ஆம் தேதி பஞ்சாப் காவல்துறை உயர் நீதிமன்றத்தில் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, NDPS சட்டத்தின் கீழ் 16,149 வழக்குகள் உள்ளன, இதில் அக்டோபர் 7, 2021 க்கு முன்னர் விசாரணை நீதிமன்றங்களால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் அக்டோபர் 23, 2023 ஆம் தேதி வரை இன்னும் விசாரணையில் உள்ளன.
ஓய்வு பெற்ற பஞ்சாப் டி.ஜி.பி ஷஷிகாந்த், இந்த எஃப்.ஐ.ஆர்களில் உள்ள காப்பி அண்ட் பேஸ்ட் தன்மைக்கு மோசமான பயிற்சி பெற்ற ஜூனியர் போலீஸ் அதிகாரிகளே காரணம் என்று கூறினார். "அனைத்து காவல்துறை அமைப்புகளுக்கும் படையின் உச்சக்கட்டத்தில் தொடர்ச்சியான கல்வி தேவைப்படுகிறது, ஆனால் அது இல்லாத நிலையில், இந்த அறிக்கைகளை எழுதும் ஜூனியர் ஏ.எஸ்.ஐ-நிலை அல்லது சப்-இன்ஸ்பெக்டர்-நிலை காவலர்கள் 'மோமி லிஃபாஃபா' மற்றும் பலரின் பழைய ட்ரோப்களை தொடர்ந்து நம்பியிருக்கிறார்கள்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.