Advertisment

ஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 3 ரயில்வே அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Culpable homicide disappearance of evidence CBI arrests 3 Railways staff for Coromandel accident

ஒடிசாவில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட ரயில் பெட்டிகளை படத்தில் காணலாம்.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஜூன் 2 அன்று கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் இரண்டு ரயில்கள் சம்பந்தப்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 293 பேர் உயிரிழந்தனர்.

இந்த ரயில் விபத்து தொடர்பாக மூன்று ரயில்வே ஊழியர்களை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வெள்ளிக்கிழமை (ஜூலை 7) கைது செய்தது.

Advertisment

கைது செய்யப்பட்டவர்கள் மூத்த பிரிவு பொறியாளர் (சிக்னல்) அருண் குமார் மஹந்தா, மூத்த பிரிவு பொறியாளர் அமீர் கான் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பப்பு குமார் யாதவ் ஆகியோர் ஆவார்கள்.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 304 (கொலைக்கு சமமான குற்றம்), 201 (குற்றத்திற்கான ஆதாரங்கள் மாயம் அல்லது தவறான தகவல் வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இ.பி.கோ பிரிவுகள் 337, 338, 304A (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 34 (பொது நோக்கம்), மற்றும் பிரிவுகள் 153 (சட்டவிரோத மற்றும் அலட்சியமாக பயணிகளின் உயிருக்கு ஆபத்து), 154 மற்றும் 175 (உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்) ஆகியவற்றின் கீழும் சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடமையின் போது ரயில்வே அதிகாரிகள் செய்யும் தவறுகள் மற்றும் அலட்சியம் கூட விபத்துகளை ஏற்படுத்தலாம்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Train Odisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment