தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்முதலில் செய்தி வெளியிட்டபடி, அகமதாபாத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ரிஸ்வான் கத்ரி, பி.எம்.எம்.எல்-ன் உறுப்பினர், 2008-ல் சோனியா காந்தியால் பெறப்பட்டதாகக் கூறப்படும் நேருவின் கடிதங்களைத் திருப்பித் தருமாறு ராகுல் காந்திக்கு எழுதினார்; இந்த விவகாரத்தை பா.ஜ.க எம்.பி சம்பித் பத்ரா மக்களவையில் திங்கள்கிழமை எழுப்பினார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Can take action’: Culture Minister Gajendra Singh Shekhawat tells LS on demand for Gandhi family to return Nehru’s letters
2008-ம் ஆண்டு சோனியா காந்தியால் வாங்கப்பட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சில கடிதங்களை நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்துக்குத் (என்.எம்.எம்.எல்)திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
கீழ்சபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய பா.ஜ.க எம்.பி சம்பித் பத்ரா, இந்த ஆண்டு தொடக்கத்தில் என்.எம்.எம்.எல் என்பது மாற்றப்பட்டு பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது என்றார். நேரு மற்றும் எட்வினா மவுண்ட்பேட்டன், பாபு ஜெகஜீவன் ராம் மற்றும் ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோருக்கு இடையேயான சில கடிதங்கள், 2008-ம் ஆண்டு எம்.வி.ராஜன் அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றப்பட்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருந்த காந்திக்கு 51 அட்டைப்பெட்டிகளில் அனுப்பப்பட்டன.
அகமதாபாத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ரிஸ்வான் கத்ரி, காங்கிரஸ் எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு அவருடைய தாயாரின் பிரதிநிதி ஒருவர் எடுத்துச் சென்ற ஆவணங்களைத் திருப்பித் தர உதவுமாறு கோரி கடிதம் எழுதியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, பா.ஜ.க எம்.பி இந்த விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு இந்த பதிவுகள் முக்கியமானவை என்று கூறிய பத்ரா, இந்த விஷயத்தை ஆராய்ந்து, பதிவுகளை மீண்டும் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வர கலாச்சார அமைச்சகத்திடம் முறையிட்டார்.
இதற்கு பதிலளித்த ஷெகாவத், இந்த ஆலோசனையை தான் கவனித்ததாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பின்னர், பா.ஜ.க தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பத்ரா, இந்த கடிதங்கள் "வரலாற்று பாரம்பரியம்" என்றும் எந்த குடும்பத்தின் சொத்தும் அல்ல என்றும் கூறினார்.
“முதல் குடும்பம் பகிரங்கப்படுத்தக் கூடாது என்றால் அந்தக் கடிதங்களில் என்ன இருந்தது” என்று பத்ரா கேட்டார்.
இரண்டு சிக்கல்கள் இருப்பதாக பத்ரா கூறினார் - ஒன்று, "முதல் குடும்பத்தின் உரிமை உணர்வு", இரண்டாவது, கடிதத்தின் உள்ளடக்கம் என்ன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், கடிதங்களை அருங்காட்சியகத்துக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் தனது கோரிக்கையை வலியுறுத்தினார்.
பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வத்ரா மக்களவையில் சமீபத்தில் பங்களாதேஷில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த பிரச்சினையை எழுப்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பூஜ்ய நேரத்தின் போது பேசிய வயநாடு எம்.பி., “பங்களாதேஷில் சிறுபான்மையினர், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக இந்த அரசு குரல் எழுப்ப வேண்டும். பங்களாதேஷ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் மற்றும் வலியில் உள்ளவர்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும்.” என்று கூறினார்.
1971-ல் டாக்காவில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்திடம் சரணடைந்ததை சித்தரிக்கும் ஓவியம் சவுத் பிளாக்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து பிரியங்கா காந்தி வத்ரா எழுப்பினார். இந்த முக்கியமான ஓவியம் ராணுவத் தளபதியின் பல உத்தியோகபூர்வ சந்திப்புகள் மற்றும் வருகை தந்த பிரமுகர்களின் பின்னணியாக இருந்தது.
டிசம்பர் 16, 1971-ல் டாக்காவில் சரணடைவதற்காக கையொப்பமிடப்பட்ட தினமான விஜய் திவாஸைக் குறிக்கும் திங்கள்கிழமை மானெக்ஷா மையத்தில் "பொருத்தமான இடத்திற்கு" ஓவியம் மாற்றப்பட்டதாக கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பின்னர் சபையில் தெரிவித்தார்.
பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து இரு தரப்பு எம்.பி.க்களால் எழுப்பப்பட்ட ஒரு விவகாரமாகா இருந்தது. சிவசேனா எம்.பி நரேஷ் மஸ்கே இந்த விஷயத்தை எழுப்பிய போது, திரிணாமுல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய், இது குறித்து அரசு அறிக்கை அளிக்குமாறு கோரினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.