மே 28 ஆம் தேதி சாவர்க்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், கலாச்ச்சார அமைச்சகத்தின் ஜூன் மாத இதழ் சாவர்க்கருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாகவும், சுதந்திரப் போராட்டத்தின் 75வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இனி வரவிருக்கும் இதழ்களை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தொடர்ந்து சமர்ப்பணம் செய்யும் என்று ஜி.எஸ்.டி.எஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் ஸ்மிருதி (ஜி.எஸ்.டி.எஸ்) வெளியிடும் மாத இதழான ‘அந்திம் ஜன்’ (Antim Jan) சமீபத்திய இதழ், கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது பிரதமரை அதன் தலைவராகக் கொண்டுள்ளது. இந்த இதழ் “வரலாற்றில் அவருடைய இடம் மரியாதையில் காந்தியைவிட குறைவானது இல்லை” என்ற முன்னுரையுடன் விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
சிறந்த தேசபக்தர் சாவர்க்கர் பற்றி ஜி.எஸ்.டி.எஸ் துணைத் தலைவரும் பாஜக தலைவருமான விஜய் கோயல் எழுதிய முன்னுரையில், ‘சுதந்திரப் போராட்டத்தின் போது, ஒரு நாள் கூட சிறையில் கழிக்காதவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் பங்களிக்காதவர்கள் என்று சாவர்க்கரைப் போன்ற தேசபக்தரை விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. சாவர்க்கரின் பங்களிப்பு வரலாற்றிலும் சுதந்திரப் போராட்டத்தில் மரியாதையில் காந்திக்குக் குறைவானது இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கோயல் எழுதுகையில், இது துரதிர்ஷ்டவசமானது, அவரது பங்களிப்பு இருந்தபோதிலும், சாவர்க்கருக்கு பல ஆண்டுகளாக சுதந்திரப் போராட்ட வரலாற்றில் உரிய இடம் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மே 28 ஆம் தேதி சாவர்க்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், கலாச்ச்சார அமைச்சகத்தின் ஜூன் மாத இதழ் சாவர்க்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும், சுதந்திரப் போராட்டத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் வரவிருக்கும் இதழ்களை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தொடர்ந்து சமர்ப்பணம் செய்யும் என்று ஜி.எஸ்.டி.எஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1984 இல் நிறுவப்பட்ட ஜி.எஸ்.டி.எஸ்-இன் அடிப்படை நோக்கம், பல்வேறு சமூக-கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் மகாத்மா காந்தியின் வாழ்க்கை, பணி மற்றும் எண்ணங்களைப் பிரச்சாரம் செய்வதாகும். காந்தியவாதிகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு பரிந்துரைக்கப்பட்ட அமைப்பு அதன் செயல்பாடுகளுக்கு வழிகாட்டுகிறது.
ஜூன் மாத இதழின் முகப்பு அட்டையில் சீதாராம் வரைந்த சாவர்க்கர் ஓவியம் உள்ளது. மேலும், 68 பக்க இதழில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மராத்தி நாடக மற்றும் திரைப்பட எழுத்தாளர் ஸ்ரீரங், காட்போல், அரசியல் விமர்சகர் உமேஷ் சதுர்வேதி மற்றும் எழுத்தாளர் கன்ஹையா திரிபாதி உள்ளிட்ட எழுத்தாளர்களின் இந்துத்துவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல, சாவர்க்கர் அவருடைய புத்தகத்தில் இந்துத்துவம் பற்றி எழுதிய ஒரு கட்டுரை எடுக்கப்பட்டு, இந்த இதழியில் அவருடைய பெயரிலேயே வெளியிடப்பட்டுள்ளது.
கோயலின் முன்னுரையைத் தொடர்ந்து, இந்தியாவில் மத சகிப்புத்தன்மை பற்றிய மகாத்மா காந்தியின் ன் கட்டுரை உள்ளது.
வாஜ்பாயின் கட்டுரை சாவர்க்கரை ‘ஒரு ஆளுமை அல்ல, அவர் ஒரு சிந்தனைவாதி என்றும், காந்திக்கு முன் ஹரிஜன் சமூகத்தைச் சேர்ந்த மக்களை உயர்த்துவது பற்றி சாவர்க்கர் பேசியதாகவும் குறிப்பிடுகையில், காட்போல் சாவர்க்கர் மற்றும் காந்தியின் படுகொலை வழக்கு பற்றி எழுதினார். காந்திக்கும் சாவர்க்கருக்கும் இடையிலான உறவைப் பற்றி நூலாசிரியர் மதுசூதன் செரேக்கர் எழுதியுள்ளார்.
அதே நேரத்தில், இந்த இதழில் சாவர்க்கர் எழுதிய புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பக்கமும் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”