Advertisment

தனியார் துறையை அவமதிக்கும் கலாச்சாரத்தை ஏற்க முடியாது - மோடி

, கொரோனா தொற்று காலங்களில் உலக நாடுகளுக்கு மனித நேய உதவிகளை இந்தியா வழங்குகிறது காரணம் தனியார் துறையின் பங்கு தான்.

author-image
WebDesk
New Update
Culture of abusing private sector no longer acceptable: PM Narendra Modi

Narendra Modi : மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார் பிரதமர் நர்ரேந்திர மோடி. அப்போது அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்புகளும் மிக முக்கியம். எனவே அந்த துறையை அவமதிக்கும் போக்கினை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.

Advertisment

மேலும் படிக்க : குவைத், சவுதி நாடுகள் செல்லும் இந்தியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றோமோ அதே அளவிற்கு தனியார் துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏன் என்றால் அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய பங்களிப்பை தருகின்றன என்று அவர் கூறினார். தொலைத்தொடர்பு மற்றும் மருத்துவத்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அபாரமனாது என்று அவர் தெரிவித்தார்.

ஏழை மக்களுக்கும் இன்று ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துகின்றார்கள் என்றால் அதற்கு தனியார் நிறுவனங்கள் தான் காரணம் என்று கூறிய அவர், கொரோனா தொற்று காலங்களில் உலக நாடுகளுக்கு மனித நேய உதவிகளை இந்தியா வழங்குகிறது காரணம் தனியார் துறையின் பங்கு தான்.

எனவே தனியார் துறைக்கு எதிராக நாம் அவதூறாக பேசுவதையும், அவமதிக்கும் கலாச்சாரத்தையும் நிறுத்திக் கொள்வோம். நமது இளைஞர்களை நாம் இவ்வாறு இழிவுப்படுத்தக் கூடாது என்றும் நேற்றைய உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கான புதிய இலக்கினை மத்திய அரசு இந்த பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment