Advertisment

உணவு பிளாக்கர் ஜெகநாதர் கோயிலுக்கு சென்றதால் சர்ச்சை: ‘மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை, ஊக்குவிப்பதில்லை’ காமியா ஜானி விளக்கம்

“கோயில் அதிகாரிகளுக்கு சில விதிகள் உள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் எந்த விதியையும் மீறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு இந்து, நான் ஒருபோதும் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை, அதை ஊக்குவிப்பதும் இல்லை” என்று உணவு பிளாக்கர் காமியா ஜானி கூறினார்.

author-image
WebDesk
New Update
food blogger

‘மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை, ஊக்குவிப்பதில்லை’ காமியா ஜானி விளக்கம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

“கோயில் அதிகாரிகளுக்கு சில விதிகள் உள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் எந்த விதியையும் மீறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு இந்து, நான் ஒருபோதும் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை, அதை ஊக்குவிப்பதும் இல்லை” என்று உணவு பிளாக்கிங் கர்லி டேல்ஸ் யூடியூப் சேனலை நடத்தும் காமியா ஜானி கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘Never eaten beef nor promoted it’: Food blogger Kamiya Jani after visit to Jagannath temple sparks row

உணவு வலைப்பதிவாளர் காமியா ஜானி சமீபத்தில் ஒடிசாவின் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலுக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆளும் பி.ஜே.டி கட்சியை மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஊக்குவிப்பவரை கோயிலுக்குள் நுழைய அனுமதித்ததற்காக தாக்கின.

யூடியூப்பில் உணவு வலைப்பதிவு சேனலான கர்லி டேல்ஸை நடத்தும் ஜானி, ஞாயிற்றுக்கிழமை ஒரு தெளிவுபடுத்தலை வெளியிட்டார். அவர் “இந்து மதத்தைப் பின்பற்றுபவர் என்றும், அவர் ஒருபோதும் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை அல்லது ஊக்குவிப்பதுமில்லை என்றும் கூறினார்.

“ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்றதன் நோக்கம், ஜெகநாதரின் ஆசிகளைப் பெறுவதும், அதன் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த தகவல்களை மக்களுக்கு வழங்குவதும் ஆகும். எனது வருகை சர்ச்சையாக மாறியது துரதிர்ஷ்டவசமானது” என்று காமியா ஜானி இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறியுள்ளார்.

“கோயில் அதிகாரிகளுக்கு சில விதிகள் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் எந்த விதியையும் மீறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு இந்து மதத்தை கடைபிடிப்பவன், நான் ஒருபோதும் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை, அதை நான் ஊக்குவிப்பதும் இல்லை” என்று காமியா ஜானி கூறினார்.

காமியா ஜானி மேலும் கூறுகையில், “ஒரு உணவு பதிவர் என்ற முறையில், பல்வேறு இடங்களின் உள்ளூர் உணவு வகைகளை மக்களுக்குக் காட்டினேன். அதுதான் கேரள வீடியோவில் நடந்தது - அதன் ஸ்கிரீன்ஷாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கேரள உணவகத்தில் மாட்டிறைச்சி உணவைக் கண்டுபிடித்த இரண்டு டிரக் டிரைவர்களைப் பற்றிய கதை. நான் மாட்டிறைச்சி சாப்பிடாததால் கடலை கறி, ஆப்பம், பழம் பொரி சாப்பிட்டேன்.” என்று கூறியுள்ளார்.

“உள்ளூர் உணவைப் பற்றி நான் பார்வையாளர்களுக்குச் சொல்லும் வீடியோக்கள் நிறைய உள்ளன, ஆனால் நான் அதையெல்லாம் சாப்பிடுவதில்லை. இது ஒரு தவறான புரிதலாக இருந்திருக்கலாம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, மேலும் அந்த தவறான புரிதலை முடிவுக்கு கொண்டு வரவே இந்த தெளிவுபடுத்தலை வெளியிடுகிறேன்” என்று காமியா ஜானி கூறினார்.

மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான கிரிராஜ் சிங், வெள்ளிக்கிழமை, காமியா ஜானியின் வருகையின் போது அவருடன் காணப்பட்ட பி.ஜே.டி-யின் வி.கே. பாண்டியனை விமர்சிக்க எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “பூரி ஸ்ரீமந்திரில் புனிதம் மீறப்படுவது மிகவும் கவலை அளிக்கிறது. வி.கே.பாண்டியன் மாட்டிறைச்சி ஊக்குவிப்பாளரை ஜெகநாதர் கோயிலுக்குள் அனுமதித்தது மதம், வரலாறு மற்றும் ஆன்மீகத்தை புறக்கணிக்கும் செயலாகும். இதற்கு காரணமானவர்கள் மீது உடனடி மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

காமியா ஜானியின் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்களையும் மத்திய அமைச்சர்  ‘மாட்டிறைச்சி’ என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

ஒடிசா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரத் பட்நாயக், ஜானியின் கோவிலுக்கு அவரது அறிவுறுத்தலின் படி நடந்திருந்தால், பட்நாயக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்று பி.டி.ஐ-யில் செய்தி வெளியாகி உள்ளது.

பி.ஜே.டி எம்.பி மானஸ் மங்கராஜ் சனிக்கிழமை ஜானியை  ‘போலி செய்தி’ மூலம் ‘அவதூறு’ செய்ததற்காக பா.ஜ.க-வைத் தாக்கினார். “இந்து பாரம்பரியம் மற்றும் கோயில்கள் பற்றிய திரைப்படங்களை உருவாக்க காமியா ஜானியை பா.ஜ.க அரசு நியமித்தது. அவர் ராம் லல்லாவைப் பார்க்க சார்தாம் மற்றும் அயோத்திக்கு சென்றுள்ளார். அதற்காக நீங்கள் அனைவரும் அவளை நேசிக்கிறீர்கள்” என்று மங்கராஜ் கூறினார்.

“தாம் அசி பரிக்ரமா திட்டத்தின் வீடியோவை அவர் எடுத்தபோது, உடனடியாக உங்களைப் பின்பற்றுபவர்கள் போலிச் செய்திகள் மற்றும் போலி வீடியோக்கள் மூலம் அவரைக் களங்கப்படுத்த முயன்றனர். ராமர் கோவிலை விளம்பரப்படுத்துவது சரியென்றால், பரிக்ரமா திட்டத்தை விளம்பரப்படுத்துவதில் என்ன பிரச்சனை?” என்று மங்கராஜ் எக்ஸ் பக்கத்தில் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment