காவிரி ஒழுங்காற்று ஆணையம், தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு செவ்வாய்க்கிழமை (செப்.26) பரிந்துரைத்தது.
காவிரி நதிநீரைத் திறந்துவிடக் கூடாது எனக் கோரி கன்னட விவசாயிகள், கன்னட ஆதரவு அமைப்புகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் “பெங்களூரு பந்த்” நடத்தும் அதே நாளில் இது வந்துள்ளது.
இன்று, பெங்களூரு சுதந்திர பூங்கா மற்றும் பிற இடங்களிலும் போராட்டக்காரர்கள் ஏராளமானோர் கூடி, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெங்களூருவில் உணவகங்கள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டதால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனினும், மெட்ரோ, பிஎம்டிசி, கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தும், ஓலா, உபேர் உள்ளிட்ட கால் டாக்சிகளும் இன்று வழக்கம் போல் இயங்கின.
இந்நிலையில், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவை, 5,000 கன அடியில் இருந்து, 3,000 கன அடியாக குறைக்க, CWRC கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக கர்நாடக அதிகாரிகள் கூறி வருகின்றனர். கர்நாடகாவின் நான்கு நீர்த்தேக்கங்களுக்கு வரும் திங்கள்கிழமை வரை 53.04 சதவீதம் அளவுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதாக அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.
மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முன்பு 161 தாலுக்காக்களை கடும் வறட்சி பாதித்ததாகவும், 34 தாலுக்காக்களை மிதமான வறட்சி பாதித்ததாகவும் அறிவித்தது.
அதில், 32 கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட தாலுக்காக்களும், 15 மிதமான வறட்சி பாதித்த தாலுக்காக்களும் காவிரிப் படுகையில் வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“