Advertisment

புதுவையில் ஒரே மாதத்தில் ஆன்லைன் மோசடியில் ஏமாந்த 271 பேர்; ரூ.10.48 கோடி இழப்பு - சைபர்கிரைம் போலீஸ் தகவல்

புதுச்சேரியில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் இணைய வழி மோசடியில் சிக்கி 271 நபர்கள் 10,48,00,549 ( பத்து கோடியே 48 லட்சத்து 549 ரூபாய்) பணத்தை இழந்தனர் என இணையவழி போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
cyber scams india pm modi Tamil News

புதுச்சேரியில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் இணைய வழி மோசடியில் சிக்கி 271 நபர்கள் 10,48,00,549 ( பத்து கோடியே 48 லட்சத்து 549 ரூபாய்) பணத்தை இழந்துள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் இணைய வழி மோசடியில் சிக்கி 271 நபர்கள் 10,48,00,549 ( பத்து கோடியே 48 லட்சத்து 549 ரூபாய்) பணத்தை இழந்தனர் என சைபர் கிரைம் போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

Advertisment

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் புதுச்சேரியைச் சார்ந்த 271 நபர்கள் பல்வேறு முறையில் இணைவழி மோசடிக்காரர்களிடம் சிக்கி 10 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை இழந்து உள்ளனர். அதில் மிக அதிக பணம் இழப்பு ஆன்லைன் டிரேடிங் என்ற முறையில் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்தால் மிக அதிகமாக லாபம் உங்களுக்கு கிடைக்கும் என telegram  இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் மூலமாக ஒரு லிங்கை அனுப்பி ஏமாற்றி எட்டு கோடி ரூபாய்க்கு மேல்  பணத்தை இழந்துள்ளனர். 

இது மட்டுமில்லாமல், டெலிகிராம் டாஸ்க் என்ற முறையில் 16 நபர்களும் குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருகிறோம் என்ற முறையில் 11 புகார்களும் புதிய நபர்களிடமிருந்தும் அறிமுகமில்லாத போலி அழைப்புகள் சம்பந்தமாக 42 புகார்கள் பதிவாகி இருக்கின்றது. 

அதே போல், ஆன்லைன் பர்சேஸ் இன்ஸ்டாகிராம் டெலிகிராமில் வருகின்ற லிங்கில் அல்லது விளம்பரங்களில் மிகக் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறது என நம்பி 29 நபர்கள் பணத்தை செலுத்தி பொருள் அனுப்பாமல் பொருள் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளனர். மேலும். வங்கி மேலாளர் பேசுவது போல் otp எண்ணை கேட்ட மோசடி பேர்வழிகளிடம் 19 நபர்கள் பணத்தை இழந்துள்ளனர். 

Advertisment
Advertisement

இணைய வழி மோசடிகள் சம்பந்தமாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு நாராசைதன்யா ஐ.பி.எஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்வது என்னவென்றால், இணைய வழியில் வருகின்ற பெரும்பாலான ஷேர் மார்க்கெட் வேலைவாய்ப்பு, குறைந்த விலையில் பொருட்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, ஓடிபி எண்களை கேட்பது, குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருகிறோம் இன்ஸ்டாகிராம் டெலிகிராமில் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கிறது  போன்ற  இணைய வழி விளம்பரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கைகளோடு இருந்து பணத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என இணை காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment