Cyclone Amphan latest updates : வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு அல்லது நாளை காலை ஆம்பன் புயலாக உருமாற உள்ளது. கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 20 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது ஆம்பன் புயல். தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆம்பன் 24 மணி நேரத்தில் பெரும் புயலாக உருவாகும்.
Cyclone Amphan : ஆம்பன் புயல்
இந்நிலையில் கடலோர காவல்துறையினர் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.சி.ஜி. கப்பல்கள், கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் கப்பல்களை, எச்சரிக்கை செய்து துறை முகங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தீவிர முன்னேற்பாடுகள்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால், தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் புதுவையில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மீட்பு பணிகளின் போது சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம் எனவும் தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவித்துள்ளது. சீல் வைக்கப்பட்ட இடங்களில் புயல் எச்சரிக்கை இருந்தால் மக்கள் அனைவரையும் உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 மாவட்டங்கள் ஹை அலெர்ட்டில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மாநில பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.