சூப்பர் புயல் 'உம்பன்' மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே நாளை கரையை கடக்கிறது
Cyclone Amphan : ஒடிசா மாநிலத்தின் புரி, கொர்தா மாவட்டங்களில் மிகக் கனமழையும், மேற்குவங்க மாநிலத்தின் மெடினிபுர், தெற்கு மற்றும் வடக்கு 24 பரக்னாஸ் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்
அதிதீவிர புயலாக இருந்த 'உம்பன்' புயல், தற்போது சூப்பர் புயலாக மாறியுள்ளது. இது மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது.
Advertisment
மே 19ம் தேதி அதிகாலை 02.30 மணிநிலவரப்படி, உம்பன் புயல், ஒடிசாவின் தெற்கு பாரதீப் பகுதியிலிருந்து 570 கிமீ. தொலைவிலும், மேற்குவங்கம் திகாவின் தென்மேற்கு பகுதியிலிருந்து 720 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கெபுபாராவின் தென்மேற்கு பகுதியிலிருந்து 840 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
ஒடிசா மாநிலத்தின் புரி, கொர்தா மாவட்டங்களில் மிகக்கன மழையும், மேற்குவங்க மாநிலத்தின் மெடினிபுர், தெற்கு மற்றும் வடக்கு 24 பரக்னாஸ் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
உம்பன்' புயல், மே 20ம் தேதி, மேற்குவங்க மாநிலம் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹாதியா தீவுக்கு இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 195 கி.மீ வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil