உருவானது டானா புயல்... எங்கு, எப்போது கரையை கடக்கும்?

மத்திய வங்கக்கடல் பகுதியில் 'டானா புயல்' உருவானது என்றும், இந்த புயல் நாளை வியாழக்கிழமை தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடல் பகுதியில் 'டானா புயல்' உருவானது என்றும், இந்த புயல் நாளை வியாழக்கிழமை தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone Dana Bay of Bengal to cross Odisha Bengal coasts between October 24 and 25 Tamil News

மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருக்கும் 'டானா புயல்' கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'டானா' புயல் என கத்தார் நாடு பெயரிடப்பட்டுள்ளது

Advertisment

'டானா' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வியாழக்கிழமை ஒடிசாவின் புரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

புயலை எதிர்கொள்ள மேற்கு வங்க அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், மேற்கு மேதினிபூர், ஜார்கிராம், பாங்குரா, ஹுக்ளி, அவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஒடிசா மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்ப்பார்வையிட அம்மாநில அரசு 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமித்துள்ளது. 200 ரயில்கள் ரத்து செய்தும், சுற்றுலா தலங்களையும் மூடியும் உத்தரவிட்டுள்ளது.  

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Cyclone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: