Cyclone Fani Alert Southern Railway canceled 10 Trains : ஃபனி புயலின் எதிரொலியாக, தென்னக ரயில்வே பல்வேறு ரயில்களை ரத்து செய்துள்ளதோடு மட்டுமல்லாது, பல்வேறு ரயில்களை மாற்றுப்பாதையில் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஃபனி புயல், ஒடிசா மாநிலத்தை தாக்க உள்ளதால், அங்கு ஏற்படும் சேதத்தை சமாளிக்கும் பொருட்டும், பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும் விதமாக, பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், ஒடிசாவில் முகாமிட்டுள்ளனர். கடலோர பகுதிகளில் பஸ் மற்றும் ரயில்களின் சேவை பலபகுதிகளில் ரத்து செய்யப்பட்டும் மற்றும் பல்வேறு பகுதிகளில் மாற்றுப்பாதைகளிலும் இயக்கப்பட உள்ளன.
ஃபனி புயலின் எதிரொலியாக, வெள்ளி அன்று , புரி பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், தென்னக ரயில்வே, பல்வேறு ரயில்களின் சேவைகளை ரத்து செய்தும் மற்றும் பல ரயில்களை மாற்றுப்பாதையில் இயக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
Cyclone Fani Alert Trains canceled : மே 2ல் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல்
ரயில் எண் 12841 - ஹவுரா - புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் - கோரமெண்டல் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12842 - மே 2ம் தேதி காலை 08.45 மணிக்கு புறப்படும் ஹவுரா கோரமெண்டல் எக்ஸ்பிரஸ்- புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்
ரயில் எண் 12663- ஹவுரா- திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12863 - ஹவுரா - யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12839 - ஹவுரா - சென்னைசென்ட்ரல் ரயில் நிலையம்
ரயில் எண் 22644 பாட்னா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 06057- சந்திரகாஞ்சி - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கோரமெண்டல் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12508 - சில்சார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்
மே 3ல் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல்
ரயில் எண் 12245 - ஹவுரா - யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 22603 - காரக்பூர்-விழுப்புரம் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 12841 - ஹவுரா - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கோரமெண்டல் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 22817 - ஹவுரா - மைசூரு எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 22807 - சந்திரகாஞ்சி - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
ரயில் எண் 18496 - புவனேஸ்வர் -ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள்
ரயில் எண் 12509 - பெங்களூரு கண்டோன்மென்ட் - கவுகாத்தி எக்ஸ்பிரஸ், விஜயநகரம், தித்லகார், ஜர்சுகுடா வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்
சமீபத்திய வானிலை நிலவரப்படி, ஃபனி புயல், ஒரு மணி நேரத்திற்கு 5 கிலோமீட்டர் விகிதத்தில் நகர்ந்து வருகிறது. புயல், ஒடிசாவின் கோபால்பூர்- சந்த்பாலி இடையே, புரிக்கு அருகே மே 3ம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 170 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்னக ரயில்வே பல ரயில்களின் சேவைகளை ரத்து செய்தும், பல்வேறு ரயில்களை மாற்றுப்பாதைகளில் இயக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தென்கிழக்கு ரயில்வே, புயல் பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பொருட்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளன. தற்போது கூடுதலாக 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் முறையே மதியம் 3 மணி மற்றும் மாலை 6 மணிக்கு புரி ரயில்வே ஸ்டேசனிலிருந்து புறப்பட்டு ஹவுராவை சென்றடையும்.
இந்த ரயில்கள் குர்தா சாலை, புவனேஸ்வர், கட்டாக், ஜெய்ப்பூர், கெண்டுஜார் சாலை, பத்ராக், பாலாசூர் மற்றும் காரக்பூர் ரயில்வே ஸ்டேசன்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஃபனி புயல் : ஒரு சுவாரசிய பார்வை… ஏப்ரல் – மே மாதங்களில் உருவாகும் புயல்களால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?