ஃபீஞ்சல் புயல் மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் புதுச்சேரி - கடலூர் சாலை இடையார்பாளையம் அருகே பாலம் பழுதடைந்தது. பழுதடைந்த பாலத்தை இரண்டு நாட்களில் போர்க்கால அடிப்படையில் சீர் செய்து இன்று முதல் பொதுமக்கள் போக்குவரத்திற்கு புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் திறந்து வைத்தார்.
முதற்கட்டமாக பேருந்து போக்குவரத்து இலகு ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் சரக்கு வாகனங்கள் ஐந்து நாட்களுக்குப் பிறகு அனுமதிக்கப்படும். விரைவாக நடவடிக்கை எடுத்து பாலத்தை சீர் செய்து போக்குவரத்தை மீண்டும் தொடங்கியதற்காக துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது காவல்துறை கண்காணிப்பாளர்கள் மோகன் குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பக்தவச்சலம், உதவி பொறியாளர் ராதாகிருஷ்ணன், இளநிலைப் பொறியாளர் ஜெயராஜ் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“