கரையை கடந்தது நிசார்கா புயல் : அலிபாக் பகுதியில் கனமழை (வீடியோ)

Cyclone Nisarga: கனமழை எதிரொலியாக, மும்பைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையை மத்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளது. அதேபோல், விமானங்களின் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள்...

நிசார்கா புயல், மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் நண்பகல் 12.30 மணியளவில் கரையை கடந்தது. புயல் முழுவதும் கரையை கடக்க 3 மணிநேரங்கள் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிசார்கா புயல், தற்போது அலிபாக்கில் இருந்து தெற்கு நோக்கி 40 கி.மீ. தொலைவிலும், தெற்கு மும்பையிலிருந்து 95 கி.மீ. மற்றும் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 325 கி.மீ. தொலைவில் கரையை கடந்து வருகிறது.

உம்பன் புயலை தொடர்ந்து இரண்டு வார கால அளவில், நிசார்கா புயல், இந்திய மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையை, நிசார்கா புயல் தாக்கியுள்ளது, இதற்கு முன்னதாக கடந்த 1902ம் ஆண்டில் அரபிக்கடலில் உருவான புயல், மும்பையில் பெரும்சேதத்தை விளைவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொங்கன், மும்பை, புனே, பல்கார், ரத்னகிரி, ராய்காட் உள்ளிட்ட மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் பலத்த காற்று வீசிவருகிறது.

மும்பை, தானே, பல்கார், ராய்காட், துலே, நந்துர்பார், நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் கொரோனா கோரத்தாண்டவத்தின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், தற்போது நிசார்கா புயல் மேலும் பேரிடியாக அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், குடிசை வீடுகள், சாலைகள், மின்விநியோகம், தொலைதொடர்பு வசதிகள் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலியாக, மும்பைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையை மத்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளது. அதேபோல், விமானங்களின் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு, இந்திய கப்பற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கடலோர மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

 

 

 

 


மும்பை மக்கள் பயன் பெற 1916 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

,தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற//t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க -Cyclone Nisarga makes landfall, heavy rain in Alibagh

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close