Advertisment

சிவகுமார் மீதான சி.பி.ஐ சொத்து குவிப்பு வழக்கு: ஐகோர்ட் தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு

டி.கே.சிவகுமார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் சி.பி.ஐ விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
D K Shivakumar gets relief from Supreme Court in disproportionate assets case Tamil News

கர்நாடக துணை முதல் அமைச்சர் டி.கே. சிவக்குமார்.

SC dismisses CBI's plea in CM DK Shivakumar's graft case Tamil News: கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2019 செப்டம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், 2019 அக்டோபரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மூன்று வருட விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத் துறை வழக்கில் 2022 மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Advertisment

2020 அக்டோபரில், சி.பி.ஐ, சிவகுமாருடன் தொடர்புடைய சுமார் 70 இடங்களில் ஆகஸ்ட் 2017ல் நடத்தப்பட்ட வருமான வரித் துறையின் சோதனைகளின் அடிப்படையில், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற வைக்கும் முயற்சியில், குஜராத்தின் 42 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பது தொடர்பாக பெங்களூரு அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சிவகுமார் சென்றிருந்த நேரத்தில், இந்த சோதனை நடத்தப்பட்டது.

2013 ஏப்ரல் முதல் 2018 ஏப்ரல் வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் சிவகுமார் எரிசக்தி அமைச்சராக இருந்தபோது, கணக்கில் வராத‌ ​​ரூ.74.93 கோடி மதிப்பிலான சொத்துகளின ஆவணங்கள் உள்ளதாக சி.பி.ஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்த நிலையில், 2020-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற‌ப்பட்டது. அதன்பேரில் டி.கே.சிவகுமார் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட‌து.

சிபிஐ விசாரணைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார்மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கே.நடராஜன் தலைமையிலான உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி பெஞ்ச், 2020 முதல் சி.பி.ஐ விசாரித்து வரும் ரூ.74 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சிவகுமாருக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி சிபிஐ இடைக்கால தடை வழங்கியது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவகுமாரின் மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சிவகுமாரின் வழக்கறிஞர்கள் கூறியதையடுத்து, விசாரணையின் நிலை அறிக்கையை நீதிமன்றம் கோரியதால் தடை விதிக்கப்பட்டது. இதே பெஞ்ச் அந்த தடையை மார்ச் மாதம் வரை நீட்டித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த பிப்ரவரியில் கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்ற தடையில் தலையிட மறுத்து, சிபிஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, சிபிஐக்கு ஆதரவாக உத்தரவுகள் இருந்தும், உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது என்று தெரிவித்தார். டி.கே.சிவகுமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்துதான் சி.பி.ஐ வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ஆனால், உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்சின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர மறுத்துவிட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற அமர்வு, உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவில் தலையிடப் போவதில்லை என்று கூறி, வழக்கை விரைந்து முடிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Dk Shivakumar High Court Karnataka State India Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment