Advertisment

"நீதிபதிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வேண்டும்": டி.ஒய். சந்திரசூட் வேண்டுகோள்

புதுடெல்லியில் நடைபெற்ற எக்ஸ்பிரஸ் அட்டா நிகழ்வில், உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதியதியான டி.ஒய். சந்திரசூட் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நீதிபதிகள் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

author-image
WebDesk
New Update
Chandrachud event

சமூக அமைப்புகளில் சில பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், அவை நீதிமன்றத்தின் வழக்கங்களின் கட்டாயம் எனக் கூறியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். 

Advertisment

புதுடெல்லியில் நடைபெற்ற எக்ஸ்பிரஸ் அட்டா நிகழ்வில் உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் டி.ஒய். சந்திரசூட் கலந்து கொண்டார். அப்போது, ஆசிரியர் வந்திதா மிஸ்ரா மற்றும் அபூர்வா விஷ்வநாத் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதியன்று பிரதமர் மோடியுடன் இணைந்து அவர் பிரார்த்தனை செய்வது போன்ற புகைப்படம் வெளியான நிலையில், அதன் அரசியல் சூழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

 

ஆங்கிலத்தில் படிக்கவும்:CJI DY Chandrachud at Express Adda: Deals are not cut like this (in meetings with Govt)… please trust Judges

 

“பிரதமர் மோடி என் வீட்டிற்கு வருகை தந்தது முற்றிலும் தனிப்பட்ட நிகழ்வுக்காக தான். பொது நிகழ்ச்சிக்காக அல்ல. எளிய காரணங்களுக்காக நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறைக்கு இடையே சமூக மட்டத்தில் கூட்டங்கள் நடைபெறுவதில் எந்த தவறும் இல்லை என நான் கருதுகிறேன்“ என சந்திரசூட் பதிலளித்தார்.

பின்னோக்கி பார்க்கும் போது, மற்ற நீதிபதிகள் அல்லது எதிர்க்கட்சி தலைவரை கொண்டு கட்டமைப்பை திருத்தம் செய்ய விரும்புகிறீர்களா என சந்திரசூட்டிடம் கேட்கப்பட்டது.

“எதிர்க்கட்சி தலைவரை இதில் சேர்த்துக் கொள்ள மாட்டேன். ஏனென்றால், இது சிபிஐ-யின் தலைமை அதிகாரி போன்றோரை நியமிப்பதற்கான குழு அல்ல“ எனக் கூறினார்.

பல வழக்குகளில் நீதிமன்றங்கள் ஜாமின் வழங்குவது இல்லையே என அவரிடம் கேட்டபோது, அது மிக தீவிரமான பிரச்சனை என அவர் கூறினார். ஜாமின் என்பது விதிவிலக்கு என்பதை விட விதி என்று விசாரணை நீதிமன்றங்கள் கருதுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எனது பார்வையில் இருந்து காணும் போது, நான் அனைவருக்கும் ஜாமின் வழங்கியுள்ளேன். அர்னாப் முதல் ஸூபைர் வரை அனைவருக்கும் ஜாமின் வழங்கினேன். அதுவே எனது சித்தாந்தம்.

எனது 2 ஆண்டுகள் பதவிக்காலத்தில் மட்டும் 21 ஆயிரம் ஜமின் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தமாக, அனைத்து வழக்குகளையும் சேர்த்து பார்த்தால் 21 ஆயிரத்து 358 ஜாமின் வழக்குகள் தீர்க்கப்பட்டன“ என சந்திரசூட் தெரிவித்தார். 

எதிர்க்கட்சியினரின் வழக்குகளை ஏற்கும் போது அழுத்தங்கள் ஏற்படுவதாக சந்திரசூட் முன்னர் கூறியதற்கு அவரிடம் விரிவாக விளக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அப்போது, “மின்னணு ஊடகங்கள் மூலம் அபிமானமாக செயல்படும் குழுக்களால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது“ என அவர் தெரிவித்தார். 

மேலும், “குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தால் நீதிமன்றம் சுதந்திரமாக இயங்குவதாகவும், அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றால் நீதிமன்றங்கள் சுதந்திரமாக இயங்கவில்லை என்றும் கருதுகின்றனர். இதில் எனக்கு ஆட்சேபனை உள்ளது“ என சந்திரசூட் விளக்கமளித்தார்.

நீதித்துறை நியமனங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, கொலிஜியம் அதற்கான பணியை செய்து விட்டதாக கூறிய அவர், நிலுவையில் உள்ள பரிந்துரைகளை அரசு நிறைவேற்றும் என தான் நம்புவதாக பதிலளித்தார். 

”சிலரது பெயர்கள் அரசின் முன்னிலையில் இன்னும் நிலுவையில் உள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். அவற்றை அரசு சீரமைக்கும் என நான் நம்புகிறேன். அரசியலமைப்பின் கீழ் எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப் பணியை நாங்கள் செய்து முடித்திருக்கிறோம். பெயர்களை மதிப்பிட்டு, அவற்றின் மீது விவாதித்த பின்னரே அரசுக்கு அனுப்பியுள்ளோம்“ எனக் கூறினார்.

நீதிபதிகள் நியமனத்தை அரசு தாமதப்படுத்துவது, அவற்றை நிராகரிப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறதா எனக் கேட்டதற்கு, கொலிஜியமும் நிராகரிப்பதற்கான அதிகாரத்தை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

"நிராகரிப்பதற்கான வேலையை அரசு மட்டுமே செய்வதில்லை, கொலிஜியமும் செய்கிறது. நியமன பணிகளை கொலிஜியம் சீரமைக்கும் வரை, யாரையும் நியமிக்க முடியாது" எனக் கூறினார். நீதிபதிகளின் பெயர்களை கொலிஜியத்திற்கு அளிப்பதில் மாநில அரசின் பங்களிப்பு குறித்து சந்திரசூட்டிடம் கேட்கப்பட்டது. "பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் தகுதியற்றவர்களாக இருக்கும்பட்சத்தில், அவற்றை கொலிஜியம் நிராகரித்து விடுகிறது. அவர்களை மத்திய அரசால் நியமிக்க முடியாது. தகுதியற்றவர்களை நீதிபதிகளாக நியமிக்க கூடாது என்பதில் கொலிஜியம் உறுதியாக உள்ளது.

தான் தலைமையேற்றதன் பின்பு, பரிந்துரைக்கப்பட்டவர்களில் 18 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டதாக சந்திரசூட் தெரிவித்தார். 42 பேரில் 40 பேர் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 164 பேர் பரிந்துரைக்கப்பட்டதில், 137 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், 27 பேர் அரசின் கீழ் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Justice D Y Chandrachud Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment