ராஜ்யசபை எம்.பி.க்களாக 4 பேரை ஜனாதிபதி பரிந்துரை: தலித் தலைவர், ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் இடம் பெற்றனர்

முன்னாள் எம்.பி ராம் ஷக்கல், எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா, சிற்பி ரகுநாத் மொஹபத்ரா, மற்றும் நடனக் கலைஞர் சோனல் மன்சிங் ஆகியோர் பரிந்துரை

மாநிலங்களவை என்றழைக்கப்படும் ராஜ்ய சபையில் 12 உறுப்பினர்களை நியமிப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு உரிமை இருக்கிறது. ஏற்கனவே 8 நபர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நால்வரின் பெயர்களை மாநிலங்களவைக்கு பரிந்துரை செய்திருக்கிறார்.

ராம் ஷெக்கல்

55 வயதான ராம் ஷெக்கல் உத்திரப் பிரதேச மாநிலத்தின் ராபர்ட்ஸ்கஞ் தொகுதியின் அமைச்சராக மூன்று முறை பதவி வகித்திருக்கிறார்.

தொழிலாளிகள் நலத்துறை, எனெர்ஜி, விவசாயம், பெர்ட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை சார்ந்த கமிட்டிகள் பலவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

மத்தியப் பிரதேச எல்லைப் பகுதியில் இருக்கும் பைஷ்வர் என்ற இனத்தில் இருந்து வந்த தலீத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகேஷ் சின்ஹா

டெல்லி மோதிலால் கல்லூரியின் பேராசியராக இருக்கும் சின்ஹாவின் வயது 53 ஆகும். சமூக அறிவியல் ஆராய்ச்சித் துறை கவுன்சிலில் இவர் ஒரு முக்கிய உறுப்பினராக இருக்கிறார். ஸ்வராஜ் இன் இந்தியா – க்வெஸ்ட் பார் டீ – காலனிஸெசன் ஆஃப் தி இந்தியன் மைண்ட் (Swaraj in India: Quest for De-colonization of the Indian Mind), டாக்டர் ஹெட்ஜ்வரின் வரலாறு, மற்றும் அறிவியல் மற்றும் புரட்சிக்களுக்கான தத்துவங்கள் ( Philosophy of Social , Revolution) போன்ற நூல்களையும் இவர் எழுதியுள்ளார். 2017ஆம் ஆண்டு, சமூக அறிவியல் துறையில் இவர் செய்த சாதனைகளுக்காக தீனதயாள் உபத்யாய் விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டார்.

ரகுநாத் மொஹபத்ரா

75 வயதான் இவர் ஒரு சிற்பி ஆவார்.  2013ல் பத்ம விபூஷன், 2001ல் பத்ம பூஷன், மற்றும் 1975ல் பத்ம ஸ்ரீ போன்ற உயரிய விருதுகளைப் பெற்றவர். தன்னுடைய 22வது வயதில், சிற்பிக்களுக்கான தேசிய விருதினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் இருக்கும் லலித் கலா அகாதெமியில் தலைவராக இருக்கிறார்.

சொனல் மன்சிங்

74 வயதான சொனல், இந்திய நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவர். 2003ல் பத்ம விபூஷன் விருதினையும், 1992ல் பத்ம பூஷன் விருதினையும், சங்கீத் நாடக அகாதெமி விருதினை 1987லும் பெற்றார் மன்சிங். நடன இயக்குநர், ஆசிரியர், சமூக சேவை செய்பவர் என்ற பல முகங்களை உடையவர். இந்திய பாரம்பரிய நடனங்களுக்கான மையத்தினை 1977ல் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close