Advertisment

ராஜஸ்தானில், அம்பேத்கர் சுவரொட்டியை கிழித்தவர்கள் மீது புகாரளித்த தலித் இளைஞர் கொலை

Dalit youth killed in Rajasthan after row over Ambedkar poster: Police: பீம் ராணுவத்தில் உறுப்பினராக உள்ள வினோத் பாம்னியா, ஜூன் 5 ஆம் தேதி ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தின் கிக்ரலியா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அருகே தாக்கப்பட்டார், மேலும் இரண்டு நாட்களுக்கு பின்னர் ஸ்ரீகங்கநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார்

author-image
WebDesk
New Update
ராஜஸ்தானில், அம்பேத்கர் சுவரொட்டியை கிழித்தவர்கள் மீது புகாரளித்த தலித் இளைஞர் கொலை

ராஜஸ்தானில் 21 வயதான தலித் இளைஞர் ஒருவர், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலால் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பின்னர் பலியானார். தாக்கியவர்களில் சிலர் தலித் இளைஞரின் வீட்டிற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த பி.ஆர்.அம்பேத்கரின் சுவரொட்டிகளை கிழித்ததாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் காவல் துறையினர் கூறுகின்றனர்.

Advertisment

பீம் ராணுவத்தில் உறுப்பினராக உள்ள வினோத் பாம்னியா, ஜூன் 5 ஆம் தேதி ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தின் கிக்ரலியா கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அருகே தாக்கப்பட்டார், மேலும் இரண்டு நாட்களுக்கு பின்னர் ஸ்ரீகங்கநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சுவரொட்டி சம்பவம் தொடர்பாக பாம்னியாவின் குடும்பத்தினரால் குற்றம்சாட்டப்பட்ட நால்வரில் அனில் சிஹாக் மற்றும் ராகேஷ் சிஹாக் ஆகிய இரண்டு பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 5 தாக்குதல் மற்றும் இரண்டு நாட்களுக்கு பின்னர் தலித் இளைஞரின் மரணம் குறித்து பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் இந்த இருவர் பெயரும் உள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

தாக்குதலின் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாதி குறித்து கூச்சலிட்டதாக எஃப்.ஐ.ஆர் கூறுகிறது. “ஆஜ் தும்ஹே தும்ஹாரா அம்பேத்கர்வாத் யாத் தில்வயங்கே (உங்கள் அம்பேத்கரிய சித்தாந்தத்தை உங்களுக்கு இன்று நினைவு படுத்துவோம்).” இந்த வழக்கில் “காவல்துறையின் செயலற்ற தன்மைக்கு” ​​எதிராக பீம் இராணுவம் ஒரு போராட்டத்தை நடத்தியது. .

காவல்துறையின் கூற்றுப்படி, பாம்னியா இந்த ஆண்டில் இரண்டு முறை புகார்களைப் பதிவு செய்திருந்தார். ஏப்ரல் மாதத்தில் ஹனுமான் சாலிசாவின் பிரதிகள் ஒரு பள்ளியில் விநியோகிக்கப்படுவதை ஆட்சேபித்ததை அடுத்து அச்சுறுத்தல் அழைப்புகளை வந்ததாக புகார் கொடுத்தார், மற்றொன்று ஒரு குறிப்பிட்ட சாலை வழியாக செல்ல முயன்றபோது அவரையும் அவரது குடும்பத்தினரையும் பல கிராமவாசிகள் தாக்கியதாக புகார் கொடுத்திருந்தார்.

கொலை வழக்கில் புகார்தாரர் மற்றும் தாக்குதலில் நேரில் கண்ட சாட்சியான பாம்னியாவின் உறவினர் முகேஷ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஜூன் 5 அன்று நடந்த தாக்குதல் சுவரொட்டி சம்பவத்துடன் தொடர்புடைய "பழிவாங்கும் செயல்" என்று கூறினார்.

“சமீபத்தில், எங்கள் கிராமத்தில் வசிக்கும் அனில் சிஹாக் மற்றும் ராகேஷ் சிஹாக் உள்ளிட்ட சிலர், ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி முதல் எங்கள் வீட்டிற்கு வெளியே போடப்பட்டிருந்த பாபாசாகேப் அம்பேத்கரின் பதாகைகளை கிழித்து எறிந்தனர். இது தொடர்பாக அவர்களது குடும்பத்தாரிடம் முறையிட்டோம், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் சார்பாக மன்னிப்பு கேட்டனர், ”என்று முகேஷ் கூறினார்.

“ஆனால் உண்மையான குற்றவாளிகள் பழிவாங்க விரும்பினர். ஜூன் 5 ஆம் தேதி, வினோத்தும் நானும் கிராமத்தில் உள்ள எங்கள் வயல்களுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ராகேஷ், அனில் மற்றும் இன்னும் சிலரால் தாக்கப்பட்டோம். என்னால் சிறு காயங்களுடன் தப்பிக்க முடிந்தது. ஆனால் அவர்கள் வினோத்தை 20-30 முறை ஹாக்கி மட்டையால் அடித்தார்கள். இதனால் படுகாயமடைந்த வினோத்தை ராவத்ஸர் மருத்துவமனைக்கும் பின்னர், ஹனுமன்கர் மற்றும் ஸ்ரீகங்கநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றோம், ”என்றும் முகேஷ் கூறினார்.

தாக்குதலின் ஆரம்ப எஃப்.ஐ.ஆர் ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி), 323 (உள்நோக்கத்துடன் காயப்படுத்தியதற்காக தண்டனை), 341 (தவறான செயல்பாடுகளுக்கான தண்டனை) மற்றும் 143 (சட்டவிரோத செயல்களுக்கான தண்டனை) - மற்றும் எஸ்.சி. / எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு) சட்டம்.

வினோத்தின் மரணத்திற்குப் பிறகு, ஐபிசி பிரிவு 302 இன் கீழ் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

காவல்துறை செயல்படவில்லை என்பது தவறானது, சம்பவம் நடந்த உடனே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஹனுமன்கர் எஸ்.பி ப்ரீத்தி ஜெயின் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு வழிவகுத்ததாக நம்பப்படும் சம்பவம் குறித்து ஜெயின் கூறுகையில்,  “பி.ஆர்.அம்பேத்கரின் சுவரொட்டிகள் வினோத்தின் வீட்டில் வைக்கப்பட்டன. மே 24 அன்று கிராமத்தைச் சேர்ந்த சில ஆண்கள் அவற்றைக் கிழித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பஞ்சாயத்தின் மூலம் மன்னிப்பு கேட்டனர். ஆனால் காவல்துறையை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் சுவரொட்டிகளைக் கிழித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் இந்த சம்பவத்தை மறந்துவிடவில்லை, ஜூன் 5 அன்று தாக்குதலை நடத்தினார், இது தலித் இளைஞரின் மரணத்திற்கு வழிவகுத்தது. ” என்று கூறினார்.

ஹனுமன்கர் சோனேரி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஹனுமான் சாலிசா விநியோகிக்கப்படுவது தொடர்பாக பாம்னியாவிடம் இருந்து வந்த புகாரின் பேரில் ஐபிசி மற்றும் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதம் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். எஃப்.ஐ.ஆரில், பாம்னியா இந்த விநியோகத்தை "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று விவரித்தார், மேலும் சாதி அவதூறுகளுடன் தனக்கு அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாகவும் குற்றம் சாட்டினார் என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.

மே 25 அன்று, ராம்சார் நிலையத்தில் பாம்னியா, ஒரு குறிப்பிட்ட சாலை வழியாக வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்லும்போது, தனது கிராமத்தைச் சேர்ந்த 10 பேர், அவரையும் அவரது குடும்பத்தினரையும் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் பாம்னியாவின் குடும்பத்திற்கு எதிராக மறுபக்கம் இன்னொரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

வினோத் பீம் இராணுவத்தில் மிகவும் சுறுசுறுப்பான உறுப்பினராக இருந்தார், மேலும் சாதி பாகுபாடு தொடர்பான பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்பினார், அவற்றைப் புகாரளித்தார். அவரது கொலைக்கு காரணம் சாதி. இழப்பீடு உட்பட அவர்களின் கோரிக்கைகள் குறித்து வினோத்தின் குடும்பத்தினருக்கு அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் வரை நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் ”என்று பீம் இராணுவ மாநிலத் தலைவர் சத்தியவன் இந்தாசர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

இந்தாசரின் கூற்றுப்படி, பீம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஹனுமன்கருக்கு பாம்னியாவின் குடும்பத்தினரை சந்திக்க வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். முந்தைய எஃப்.ஐ.ஆர் மற்றும் கைதுகளில் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், வினோத் உயிருடன் இருந்திருப்பார். எஃப்.ஐ.ஆர்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ”என்றார்.

எவ்வாறாயினும், முன்னர் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்கள் தற்போதைய தாக்குதலுக்கு காரணம் இல்லை என்று எஸ்.பி. ஜெயின் கூறினார். "வயல்களில் நடந்த தாக்குதல் தொடர்பான எஃப்.ஐ.ஆர் ஒரு நில தகராறு காரணமாக இரு தரப்பினரும் காயமடைந்து இரு தரப்பினரும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். அச்சுறுத்தல் அழைப்புகள் தொடர்பான எஃப்.ஐ.ஆரைப் பொறுத்தவரை, இது துஷ்பிரயோகம் என்று கண்டறியப்பட்டது, இது அறியப்படாத குற்றமாகும், ”என்று ஜெயின் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajasthan Murder Dalit Dr Ambedkar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment