குஜராத் தலித் தாக்குதல்
குஜராத் மாநிலத்தில் தலித் இளைஞர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பவ்லா மாவட்டத்தில் இருக்கும் கவிதா கிராமத்தில் புதியதாக ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ராமன்பாய் ராம்ஜீ மக்வானா என்ற தலித் இளைஞரை சார்ட்ஸ் அணிந்ததிற்காகவும் மீசை வைத்துக் கொண்டதிற்காகவும் அப்பகுதியில் வசித்து வந்த தர்பார் ராஜ்புத் இனத்தினை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
மக்வானா பதிவு செய்த வழக்கின் பேரில் இதுவரை ஐந்து நபர்களை கைது செய்து முதல் தகவல் அறிக்கையினை சமர்பித்திருக்கிறது காவல் துறை.
தலித் மக்கள் தன்னை தாக்கியதாக, பதிலிற்கு ராஜ்புத் இனத்தவர் ஒருவர் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார். இச்செய்தியினை ஆங்கிலேயத்தில் படிக்க
ஏற்கனவே கடந்த வருடம் அக்டோபர் மாதம் அகமதாபாத்தில் மீசை வைத்திருந்த காரணத்திற்காக தலித் இளைஞரை தாக்கிய செய்தி பெரும் விவாதத்திற்கு வழி வகை செய்தது.
மீண்டும் இது போன்று சாதியியல் ரீதியான பிரச்சனைகள் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்ய காவல்துறை அக்கிராமத்தினை தீவிரமாக கண்காணித்து வருகிறது.