திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்ணின் முகத்தில் துப்பாக்கிச் சூடு! பகீர் வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dancer shot in face at UP wedding, two arrested - திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்ணின் முகத்தில் துப்பாக்கிச் சூடு! பகீர் வீடியோ

Dancer shot in face at UP wedding, two arrested - திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய பெண்ணின் முகத்தில் துப்பாக்கிச் சூடு! பகீர் வீடியோ

உத்தரபிரதேச மாநிலத்தின் சிக்ரகூட் எனும் கிராமத்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய 22 வயதான பெண் நடனக் கலைஞரின் முகத்தை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியன்று நடந்த இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

கடந்த நவம்பர் 30ம் தேதி, ஹீனா எனும் பெண் நடனக் கலைஞர் தாடையை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. அந்த கிராமத்தின் தலைவர் சுஹிர் சிங் படேல் என்பவரின் மகள் திருமண நிகழ்ச்சியில் ஹீனா நடனமாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென இரண்டு முறை துப்பாக்கியால் சுடப்பட்டது. இதில், இரண்டாவது குண்டு ஹீனாவின் தாடையில் பாய்ந்தது.

Advertisment
Advertisements
6, 2019

துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னர் ஒருவர், "இந்த பாடல் ஒலிக்கப்பட்டால் சுடுவேன்" என்று கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

42 நொடிகள் ஓடக் கூடிய அந்த வீடியோவில், ஹீனா குண்டடிப்பட்டு கீழே விழுவது பதிவாகியுள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட ஹீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, சுதிர் சிங் மற்றும் பூல் சிங் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Uttar Pradesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: