பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் முதல் காங்கிரஸ் தலைவர்கள் வரை நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட 93-வது ஆண்டு நினைவு நாளில் மாகாத்மா காந்திக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
மார்ச் 12 முதல் ஏப்ரல் 5, 1930 வரையிலான 24 நாள் நடைபெற்ர இந்த யாத்திரையானது ஆங்கிலேயர்களின் உப்பு ஏகபோகத்திற்கு எதிரான வரி எதிர்ப்பு பிரச்சாரமாகும். இது அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கி கடலோர கிராமமான தண்டியில் நிறைவடைந்தது. இது காந்தியின் அகிம்சை அல்லது சத்தியாகிரகத்தின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இது ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கத்தைக் குறித்தது.
இந்த யாத்திரை பல்வேறு வகையான அநீதிகளுக்கு எதிரான உறுதியான முயற்சியாக நினைவுகூரப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “பாபுவிற்கும், தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். இது நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தண்டி யாத்திரை இந்தியாவின் சுயசார்புக்கான வேட்கையை அடையாளப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி கூறியது.
இந்திய இளைஞர் காங்கிரஸ் மற்றும் இந்திய ஐ.என்.சி டிவி, தண்டி யாத்திரையின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளது.
மேலும், ‘அமைதியையும் அகிம்சையையும் தோற்கடிக்க முடியாது’ என்ற செய்தியை மீண்டும் வலியுறுத்தப்பட்டது” என்று பதிவிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “1930-ல் மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற தண்டி யாத்திரையில் பங்கேற்ற நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலிகள். அடக்குமுறை ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தேசத்தை ஒன்றிணைத்த வரலாற்று அகிம்சைப் போராட்டம் இது. தைரியம், உறுதிப்பாடு மற்றும் தியாகத்தால், சுதந்திரப் போரில் வெற்றி பெற்றது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தண்டி யாத்திரையில் பங்கேற்ற மகாத்மாவையும், காங்கிரஸ் தொண்டர்களையும் இந்நாளில் நினைவு கூர்வோம். இது இந்திய வரலாற்றில் மகாத்மாவின் மிகப் பெரிய நடவடிக்கை அல்ல, ஆனால் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான உறுதியான முயற்சியாக நினைவுகூரப்படும்.
குறிப்பு-ஆர்.எஸ்.எஸ் இந்த யாதிரையை நடத்தவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, அனுராக் தாக்கூர் மற்றும் ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் இந்த யாத்திரையை “இந்தியாவை சுதந்திரப் பாதையில் கொண்டு சென்றது; இந்திய மக்களின் வலிமை மற்றும் உறுதியாக நிற்கும் சக்திக்கும் சான்றாக உள்ளது” என்று பாராட்டினர்.
தேசத் தந்தை மகாத்மா காந்தி மற்றும் 1930 இல் உப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்த தண்டி யாத்திரை நாளில் பங்கேற்ற அனைவருக்கும் மரியாதை செலுத்துவதில் தேசத்துடன் சேருங்கள்.
இந்த இயக்கத்தின் மூலம், பாபு ஜி சத்தியம் மற்றும் அகிம்சையின் சக்தியை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தெலுங்கானா பிரிவும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியது. “பிரிட்டிஷ் காலனித்துவ சாம்ராஜ்யத்தின் வரி ஏகபோக சட்டங்களுக்கு எதிரான யாத்திரை” என்று குறிப்பிட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.