scorecardresearch

முறையான பராமரிப்பு இல்லை… 140 வருட பழமை வாய்ந்த மலை ரயிலுக்கு இப்படி ஒரு நிலையா?

ஆக்கிரமிப்பு, குப்பைகளையும், கழிவுகளையும் கொண்டு வந்து தடங்களில் கொட்டுவதால் பாரம்பரிய தன்மையை இழக்கும் டார்ஜ்லிங் ஹிமாலயன் ரயில்வே

Tamil Nadu news today live updates Chennai weather
Tamil Nadu news today live updates Chennai weather

Avishek G Dastidar

Darjeeling toy train’s heritage tag under threat says UNESCO : உலக பாரம்பரிய மதிப்பை இழக்கும் டார்ஜிலிங் மலை ரயில் சேவை. உலகில் இருக்கும் பாரம்பரிய தலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பராமரிக்கும் வேலையை பார்த்து வருகிறது யுனெஸ்கோ. இந்தியாவின் பாரம்பரியமான இடங்களும் இந்த பட்டியலில் அடங்கும்.  சுமார் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த டார்ஜிலிங் இமாலயன் ரயில் சேவை தற்போது தன்னுடைய பாரம்பரிய மதிப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.

இந்திய ரயில்வே 2017 முதல் 19 ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கையினை யுனெஸ்கோவிற்கு சரிவர வழங்கவில்லை. இதனை தொடர்ந்து யுனெஸ்கோ அமைப்பு தன்னுடைய குழு ஒன்றினை டார்ஜிலிங் இருக்கு அனுப்ப உள்ளது. Reactive Monitoring Mission எனப்படும் அந்த குழுவில் யுனெஸ்கோவின் வேர்ல்ட் ஹெரிட்டேஜ் கமிட்டியின் உறுப்பினர்களும்,  International Council on Monuments and Sites கவுன்சிலின் உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள். அவர்கள் ஆய்வு செய்து வெளியிடப்படும் அறிக்கையைப் பொருத்து இந்தப் பட்டியலில் டார்ஜிலிங் மலை ரயில் சேவை நீடிக்குமா இல்லது நீக்கப்படுமா என்பது தெரியவரும்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க : 

உலக பாரம்பரிய கமிட்டியின் அறிக்கையின் படி 2017 – 19 காலகட்டங்களில் இந்த மலை ரயில் சேவையை முறையாக பராமரிக்கவில்லை என்றும், இந்த ரயில் பாதை அமைதிருக்கும் பகுதிகளில் அளவுக்கதிகமான நில ஆக்கிரமிப்பு, குப்பைகளை போடும் இடமாக மாற்றியதின் விளைவாக தன்னுடைய பராம்பரிய அடையாளத்தை இந்த ரயில் சேவை இழக்க நேரிடும் என்றும் என்று அறிவித்துள்ளது.

வடகிழக்கு ரயில்வே சேவை என்ன கூறுகிறது?

வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே சேவையின் ஜெனரல் மேனேஜர் சஞ்சீவி ராய் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த தகவலின் படி “நாங்கள் யுனெஸ்கோ அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் நடத்தும் அனைத்து கூட்டங்களிலும் தவறாமல் கலந்து கொள்கிறோம்” என்று கூறினார். மேலும் “இந்த ரயில் சேவையில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் ரயில் தளத்தில் ஒரு புறம் வீடுகளும் மற்றொரு புறம் சாலையும் இருக்கிறது.  இங்கு மனிதர்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் பயன்பாடும் அதிகம் இருப்பதால் இது போன்ற சூழலை தவிர்க்க இயலவில்லை.  சில நேரங்களில் மக்கள் தங்களின் வாகனங்களை ரயில் செல்லும் தலைகளுக்கு மேலே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர் . அதனால் ரயில் சேவை பாதிப்படைகிறது. நாங்கள் இந்த ரயில் தடத்தினை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் பராமரித்து வருகிறோம். இந்த சேவையை எப்படி சிறப்புற மேம்படுத்துவது என்பது குறித்து யோசனை செய்து வருகிறோம். எனவே இதன் பாரம்பரியத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்துவிடாது என்று நம்புகிறோம்” என்றும் கூறியுள்ளார்.

Darjeeling toy train’s heritage tag – யுனெஸ்கோ பட்டியலில் இடம் நீடித்து நிற்குமா?

கடந்த வாரம் அஜெர்பைஜானில் நடைபெற்ற யுனெஸ்கோவின் ஆண்டு விழா நிகழ்வின் போது இந்த ரயில் சேவைக்கு ரெட் ஃப்ளாக் வைத்துள்ளனர்.

யுனெஸ்கோவும் மத்திய ரயில்வே துறையும் ஒன்றிணைந்து இந்த சேவையை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டன. மேலும் இதனை பாதுகாக்கும் புதிய திட்டங்களை செயல்படுத்தவும் ரயில்வே துறையை கேட்டுக் கொண்டது. கடந்த ஜூலை மாதம், விளிம்பு நிலையில் இருக்கும் இதன் பாதுகாப்பு குறித்து வடகிழக்கு ரயில்வே துறைக்கும் மத்திய அரசு எச்சரிக்கை செய்து கடிதம் ஒன்றையும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 20 வருடங்களுக்கு முன்பு யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம் பெற்றது டார்ஜ்லிங்கின் மலை ரயில் சேவை.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Darjeeling toy trains heritage tag under threat says unesco