தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா மீதான பார்லிமென்டின் கூட்டுக் குழுவின் அறிக்கையை திங்கள்கிழமை கூட்டுக் குழு ஏற்றுக்கொண்ட நிலையில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிஜேடி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஏழு எம்.பி.க்கள், அதற்கு மறுப்புக் குறிப்புகளை அளித்துள்ளனர். ஏறக்குறைய அனைவருமே மத்திய அரசு தனது எல்லைக்குட்பட்ட எந்தவொரு நிறுவனத்திற்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க அனுமதிக்கும் ஒரு ஷரத்தை எதிர்த்துள்ளனர். மசோதா மற்றும் அறிக்கையில் உள்ள மற்ற குறைபாடுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், தனது மறுப்புக் குறிப்பில், பிரிவு 35 "எந்தவொரு நிறுவனத்திற்கும் முழுச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்குகிறது" என்றும், மற்றும் பிரிவு 12 (ஏ) (ஐ) அரசாங்கங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு, ஒப்புதலுக்கான விதிகளில் இருந்து சில விதிவிலக்குகளை உருவாக்குகிறது" என்றும் எதிர்த்தார். அவரது கட்சி சகாவான மணீஷ் திவாரி, தற்போதைய வடிவில் உள்ள மசோதாவை முழுவதுமாக எதிர்த்ததாக அறியப்படுகிறது. மணீஷ் திவாரி, மசோதா வடிவமைப்பில் உள்ளார்ந்த குறைபாடு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்களது கட்சி சகாவான கௌரவ் கோகோயும், மசோதாவின் பிரிவு 12 மற்றும் 35ன் கீழ் அரசாங்கம் மற்றும் அதன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பரந்த விலக்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அறியப்படுகிறது. நவீன கண்காணிப்பு வலையமைப்பை நிறுவுவதற்கான கண்காணிப்பு மற்றும் முயற்சியில் இருந்து எழும் தீமைகள் குறித்து கவனம் செலுத்தப்படாதது, பாராளுமன்ற மேற்பார்வை இல்லாமை; கட்டமைப்பின் கீழ் தனிநபர் அல்லாத தரவின் மீதான கட்டுப்பாடு மற்றும் அபராதங்களை கணக்கிடுவதில் தோல்வி ஆகியவை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்; காங்கிரஸ் எம்பி விவேக் தங்காவும் மறுப்புக் குறிப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன் மற்றும் மஹுவா மொய்த்ரா ஆகியோர் தங்கள் கூட்டு மறுப்புக் குறிப்பில், தரவு கொள்கைகளில் தனியுரிமைக்கான உரிமையைப் பாதுகாக்க போதுமான பாதுகாப்புகள் இல்லை என்று கூறியதாக அறியப்படுகிறது. வேறுவிதமாகக் கூறினால், தனிநபர், நிறுவனம் அல்லது அமைப்பு உள்ளிட்ட யாருடைய தகவலும் சேகரிக்கப்படலாம். மறுப்புக் குறிப்பை அளித்த ஏழாவது எம்பி பிஜூ ஜனதா தள் கட்சியின் அமர் பட்நாயக் ஆவார்.
இந்த மசோதா இரண்டு இணையான பிரபஞ்சங்களை உருவாக்குகிறது என்று மணீஷ் திவாரி வாதிட்டதாக அறியப்படுகிறது. ஒன்று இந்த மசோதா முழு கடுமையுடன் பொருந்தும் தனியார் துறைக்கு, மற்றொன்று விதிவிலக்குகள் மற்றும் தப்பிக்கும் விதிகள் ஆகியவற்றால் சிக்கியுள்ள அரசாங்கத்திற்கு. பல்வேறு வகையான உள்ளடக்கம் அல்லது தரவை அணுகுவதற்கு மசோதாவின் வரையறை வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக அறியப்படுகிறது.
கூட்டுக் குழுவின் செயல்பாடு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கேள்விகளை எழுப்பினர். மேலும், உறுப்பினர்களின் ஆலோசனைகளுக்கு போதுமான நேரத்தையும் வாய்ப்பையும் வழங்காமல் ஆணையை விரைந்து நிறைவேற்றியதாக குறிப்பிட்டுள்ளனர். சட்டத்தின் வரம்பிற்குள் தனிப்பட்ட தரவுகளை உள்ளடக்கியதற்காக அவர்கள் அறிக்கையின் மீது ஆட்சேபனைகளை எழுப்பியதாக அறியப்படுகிறது.
ஓ'பிரைன் மற்றும் மொய்த்ரா ஆகியோர், தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, பிரிவு 35 இல் சரியான பாதுகாப்புகளை அறிமுகப்படுத்த கூட்டுக் குழு தவறிவிட்டதாகக் கூறியதாக அறியப்படுகிறது. உத்தேச தரவு பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கான தேர்வு நடைமுறையில் மத்திய அரசின் அதிக தலையீடு இருப்பதாக அவர்கள் கூறியதாக அறியப்படுகிறது.
ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், “அரசுகளும் அரசு நிறுவனங்களும் தனி சலுகை பெற்ற வகுப்பினராகக் கருதப்படுகின்றன, அவற்றின் நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் எப்போதும் பொது நலன் மற்றும் தனிப்பட்ட தனியுரிமைக் கருத்தில் இரண்டாம்பட்சம், என பதிவிட்டுள்ளார்.
"ஆகஸ்ட் 2017ல் உச்ச நீதிமன்றத்தின் புட்டசாமி தீர்ப்பு எனது பார்வையில், இந்திய மக்கள்தொகையில் மிக மிக மிக மிகச் சிறிய பிரிவினருக்கு மட்டுமே பொருத்தமானது, (இந்த மசோதா) ஆழ்ந்த குறைபாடு மற்றும் கவலைக்குரியது, நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்" என்றும் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.
ரமேஷ், பிரிவு 35ஐ, முழுச் சட்டத்திலிருந்தும் எந்த நிறுவனத்திற்கும் விலக்கு அளிக்க, மத்திய அரசுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு தனது ஏஜென்சிகளுக்கு சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று தான் பரிந்துரைத்ததாக ரமேஷ் கூறினார்.
"மசோதாவில் வழங்கப்பட்டுள்ள விதிவிலக்குக்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படும் என்று கூட்டுக் குழு பரிந்துரைத்திருந்தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருந்தேன். இது அதிக பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும், ஆனால் அதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகக் காணப்படவில்லை,” என்று ரமேஷ் கூறினார்.
புட்டசாமி வழக்கைக் குறிப்பிடுகையில், ஷரத்து 68ல் சட்டமூலத்திற்கு வழங்கப்பட்டுள்ள விதிவிலக்கு, மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும் வரை விதிவிலக்கு அளிக்கப்படாது என்ற விதி 35-ல் சேர்க்கப்படலாம் என்று திவாரி வாதிட்டதாக அறியப்படுகிறது. அத்தகைய விலக்கு ஏன் வழங்கப்பட வேண்டும் அல்லது வழங்கக்கூடாது என்று தீர்ப்பாயத்தை அணுக எவருக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று ரமேஷ் குறிப்பிட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.