ஐ.ஏ.எஸ் தம்பதியின் 27 வயது மகள் திங்கள்கிழமை அதிகாலை மும்பையின் நாரிமன் பாயிண்டில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார், அவரது மரணத்திற்கு யாரையும் குற்றம் சொல்லக்கூடாது என்ற தற்கொலைக் குறிப்பை அவரது அறையில் இருந்து மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க:
உயிரிழந்தப் பெண் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான முதன்மைச் செயலர் விகாஸ் ரஸ்தோகி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதிகா ரஸ்தோகியின் மகள் லிபி ரஸ்தோகி என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அதிகாலை 4 மணியளவில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மந்த்ராலயாவுக்கு அருகில் உள்ள சுனிதியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அரசு விடுதியில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"உள்ளூர்வாசிகள் குடும்பத்திற்கு தகவல் கொடுத்தனர், அதன் பிறகு அவர் ஜி.டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்," என்று போலீசார் கூறினர்.
லிபி ரஸ்தோகி ஹரியானாவில் உள்ள சோனிபட்டில் உள்ள ஓ.பி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டப்படிப்பைப் படித்து வருவதாகவும், கல்வியில் அவரது செயல்திறன் குறித்து கவலையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
லிபி ரஸ்தோகி மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ முடித்தார்.
அவரது லிங்க்ட்இன் (LinkedIn) சுயவிவரத்தின்படி, லிபி ரஸ்தோகி ஆடம்பர அழகு பிராண்டுகளைக் கையாள்வதில் பின்னணியைக் கொண்ட முன்னாள் சந்தைப்படுத்தல் நிபுணராக இருந்தார். அவர் யூனிலீவர் மற்றும் நைக்கா நிறுவனத்திலும் பணியாற்றினார்.
"எனது வாழ்க்கையை சட்ட துறைக்கு மாற்றுவதற்கு நான் கணக்கிடப்பட்ட முடிவை எடுத்தேன்," என்று அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தற்கொலைக் குறிப்பு காவல்துறையிடம் உள்ளது. அவரது சடலம் மருத்துவமனையில் உள்ளது, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்” என்று போலீசார் தெரிவித்தனர்.
கஃபே பரேட் போலீசார் விபத்து மரண அறிக்கையை பதிவு செய்து, ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
2017 ஆம் ஆண்டில், மகாராஷ்டிர கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான மிலிந்த் மற்றும் மனிஷா மைஸ்கர் ஆகியோரின் 18 வயது மகன் மலபார் மலையில் உயரமான இடத்தில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டது, இதற்கு முன் நிகழ்ந்த துயர சம்பவமாகும்.
தற்கொலை எண்ணங்கள் இருந்தால் தவிருங்கள்; கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“