காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை யாத்திரை) தொடங்கி மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்கிறார். 2ஆவது நாளான நேற்று (செப்.9) நாகர்கோவிலில் இருந்து தக்கலை வரை பயணம் மேற்கொண்டார். ராகுல் உடன் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். ராகுல் செல்லும் வழிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
Advertisment
வழிகளில் பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலருடன் கலந்துரையாடுகிறார். இந்நிலையில் நேற்று 2ஆவது நாள் பயணத்தின் போது, பிரபல சமையல் யூடியூப் சேனலான 'வில்லேஜ் குக்கிங் சேனல்' குழுவினரை ராகுல் சந்தித்து பேசினார். சுமார் 1.79 கோடி சப்ஸ்கிரைபர்களை இந்த சேனல் கொண்டுள்ளது. முன்னதாக, கடந்தாண்டு ஜனவரியில் ராகுல் தமிழ்நாட்டிற்கு வந்தபோது, இந்த குழுவினரை சந்தித்து பேசி, அவர்கள் சமைத்த காளான் பிரியாணி மற்றும் வெங்காயம்-தயிர் சாலட் மெனுவை சாப்பிட்டார். அவர்களுடன் ராகுல் அமர்ந்து சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராகியது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த குழுவினரை ராகுல் சந்தித்து பேசினார்.
ஒரு நபர், ஒரு கேள்வி
ராகுல் காந்தி முட்டிடிச்சான் பாறை தேவாலய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பல்வேறு மாநிலங்களிலிருந்து பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். முன்னதாக ஜெய்ராம் ரமேஷ் இதற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தார். அப்போது, பத்திரிகையாளர்களிடம் ஒரு நபர், ஒரு கேள்வி என்று சிரித்துக்கொண்டே கூறினார். காங்கிரஸின் ஒரு நபர் - ஒரு பதவி விதியைக் குறிப்பிடும் வகையில் பேசினார்.
தேவாலயத்தில் ஓய்வு
ராகுல் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இடையில் சிறிது நேரம் ஆங்காங்கே ஓய்வு எடுக்கிறார். அந்த வகையில் நேற்று தேவாலயத்தில் ஓய்வு எடுத்தார். முட்டிடிச்சான் பாறை தேவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள், ராகுல் உடன் பயணிப்பவர்கள் எனப் பலர் தேவாலய வளாகத்தில் ஓய்வு எடுத்தனர். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் காமராஜர் படம் உள்ள டி-சர்ட், பாத யாத்திரை செல்லும் வழிகளின் வரைப்படம் உள்ள டி-சர்ட் அணிந்து செல்கின்றனர். சாலைகளில் விதவிதமான போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news