Sujit Bisoyi
"சக்திவாய்ந்த" ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளரும், நெருக்கமானவருமான வி.கே பாண்டியனின் விருப்ப ஓய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த ஒரு நாளுக்குப் பிறகு, மாநில அரசு அவரை கேபினட் அந்தஸ்துடன் 5டி (மாற்றும் முயற்சிகள்) மற்றும் நபின் ஒடிசா தலைவராக நியமித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: Day after his VRS, Patnaik’s closest aide VK Pandian gets Cabinet rank post in Odisha govt; to work directly under CM
வி.கே பாண்டியன் நேரடியாக முதலமைச்சரின் கீழ் பணிபுரிவார் என்று மாநில பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது, இது 2000 ஆண்டு பேட்ச் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, தொடர்ந்து ஆட்சியில் "அசாதாரண செல்வாக்கை" கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
நவீன் பட்நாயக்கின் ஐந்தாவது மற்றும் தற்போதைய ஆட்சிக் காலத்தில் நிர்வாக எந்திரத்தை மாற்றியமைக்க 5T முயற்சி தொடங்கப்பட்டது, இது வி.கே பாண்டியனின் யோசனையாக நம்பப்படுகிறது. Ts என்பது 't'ransparency (வெளிப்படைத்தன்மை), 't'eamwork (குழுச்செயல்பாடு), 't'ecnology (தொழில்நுட்பம்) மற்றும் 't'ime (நேரம்) ஆகியவற்றைக் குறிக்கிறது, இது 't'ransformation க்கு (மாற்றத்திற்கு) வழிவகுக்கிறது. அதன் கீழ், ஒடிசாவில் 4,000க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை, புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுடன் மாற்றியுள்ளதாக நவீன் பட்நாயக் அரசு கூறுகிறது.
மாநில அரசின் உத்தரவு வி.கே பாண்டியனின் பங்கு குறித்து தெளிவுபடுத்தவில்லை என்றாலும், மாநில அரசின் முக்கிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் 5T இன் கீழ் எடுக்கப்படுவதால், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே பாண்டியன் அதிக அதிகாரத்துடன் பணியாற்றுவார் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, 5T என்பது இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒடிசா அரசாங்கத் துறையிலும் அதன் தடம் பதித்துள்ளது.
ஒடிசா அரசு சமீபத்தில் ரூ. 4,000 கோடி மதிப்பிலான 'அமா ஒடிசா, நபி ஒடிசா (நமது ஒடிசா, புதிய ஒடிசா)' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் வெவ்வேறு திட்டங்களை மேற்கொள்ள ரூ.50 லட்சம் கிடைக்கும், இது இப்போது வி.கே பாண்டியனின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“