பிரதமர் மோடி துவக்கி வைத்த 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ்! பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்

தீய்ந்த வாடை வந்ததாகவும், அனைத்து பெட்டிகளிலும் மின்சாரம் தடைபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது

தீய்ந்த வாடை வந்ததாகவும், அனைத்து பெட்டிகளிலும் மின்சாரம் தடைபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Day after launch by PM Modi, Train 18 breaks down 200 km outside Delhi - பிரதமர் மோடி துவக்கி வைத்த 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ்! பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்

Day after launch by PM Modi, Train 18 breaks down 200 km outside Delhi - பிரதமர் மோடி துவக்கி வைத்த 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ்! பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்

பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில், பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு பிறகு டெல்லி வந்து சேர்ந்தது.

Advertisment

சென்னை ஐ.சி.எப் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது. சமீபத்தில் தான் இந்த ரயில் தயாரிக்கப்பட்டது. டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் ஓடும் இந்த அதிநவீன ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரயிலின் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்து நேற்று காலை வாரணாசி நோக்கி புறப்பட்ட ரயில், நேற்றிரவு 10.30 மணியளவில் வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. இன்று காலை 6.30 மணியளவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள துன்ட்லா சந்திப்பு வழியாக வந்தபோது ‘பிரேக்’ சரியாக பிடிக்காமல் போனது. இதனால், சக்கரங்கள் வழுக்கிச் செல்வதை உணர்ந்த டிரைவர், ரயிலை சாமர்த்தியமாக நிறுத்தினார்.

உடனடியாக, தொலைபேசி மூலம் பொறியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது பின்னர் சுமார் ஒரு மணி நேரம் பழுது பார்க்கும் பணி முடிந்து அங்கிருந்து ரயில் புறப்பட்டது.

Advertisment
Advertisements

இந்த ரயிலின் முதல் வெள்ளோட்டத்தில் ஏராளமான பத்திரிகை நிருபர்களும், செய்தியாளர்களும் பயணித்தனர். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' சார்பிலும் இந்த ரயிலில் பயணம் மேற்கொள்ளப்பட்டது. சரியாக பிரேக் பிடிக்காதபோது அந்த ரயிலின் முதல் மற்றும் கடைசி பெட்டிகளில் இருந்து அதிர்வதைப் போன்ற சப்தம் கேட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர். கடைசி 4 பெட்டிகளில் சிறிய புகையுடன் தீய்ந்த வாடை வந்ததாகவும், அனைத்து பெட்டிகளிலும் மின்சாரம் தடைபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர் 8.15 மணியளவில் ரயில் அங்கிருந்து புறப்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால் ஆரம்பத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்திலும், பின்னர் படிப்படியாக அதிகரித்து சுமார் 40 கிலோமீட்டர் வேகத்திலும் ரெயில் செல்ல தொடங்கியது. இதற்கிடையே, அதில் இருந்த பத்திரிகையாளர்கள் அவ்வழியாக சென்ற மற்றொரு ரயிலில் டெல்லிக்கு ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

காலை சுமார் 8.55 மணியளவில் மீண்டும் ‘பிரேக்’ பிரச்சனை ஏற்பட்டு சரிபார்ப்பு பணி முடிந்து ‘வந்தே பாரத்’ ஒருவழியாக இன்று பிற்பகல் ஒருமணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது.

பிரேக் பிரச்னை என்பது ரயில்வேயில் எப்போதும் நடக்கும் நிகழ்வல்ல. பார்க்கிங் பிரேக்கில் தான் பிரேக் பிரச்சனை ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், 'மோடி அரசின் செயல்திறனுக்கு இந்த ரயில் மிகச்சிறந்த உதாரணம்’ என தெரிவித்துள்ளார்.

இந்த அதிவேக ரயிலில் பயணம் செய்வதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், 'பிரேக்' பிரச்சனை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: